யானைகள் அழித்த வீட்டை கட்டித்தர, அதிகாரிகளை வழிக்கு கொண்டுவந்த மரமனிதன்!

 

யானைகள் அழித்த வீட்டை கட்டித்தர, அதிகாரிகளை வழிக்கு கொண்டுவந்த மரமனிதன்!

காட்டு யானைகள் தானாக மனமிரங்கி மாற்றுப்பாதையில் போனால்தான் உண்டு, அதிகாரிகளால் ஒன்றும் நடக்காது என புரிந்துகொண்ட சுத்யா வேறுவழியில்லாமல் அந்த யோசனையை அமல்படுத்தினார். என்னவென்று, மரத்தில்மேல் வீடுகட்டி அங்கேயே இருந்துகொண்டார்.

ஒடிஷா, கியோஞ்கார் மாவட்டத்தின் குஸ்மிதா    கிராமத்தில் வசிக்கும் சுத்யா என்பவர் ஒரே நாளில் தேசிய செய்திகளில் இடம்பிடித்துவிட்டார். அவரும் அவுருடைய மகனும் வசித்துவரும் வீட்டை காட்டு யானைகள் துவம்சம் செய்வதும், அவை சென்றபிறகு வீட்டை அவர் புணரமைப்பதும், பின்னர் காட்டு யானைகள் திரும்பவும் கால்வரிசை காட்டுவதும் வாடிக்கையாகிவிட்டிருந்தது. அதிகாரிகளிடம் தன் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும்படியும், தனக்கு ஒரு வீடு கட்டித்தரும்படியும் தொடர்ந்து அவர் விண்ணப்பம் போட்டுக்கொண்டே இருந்தார். காட்டு யானைகள் தானாக மனமிரங்கி மாற்றுப்பாதையில் போனால்தான் உண்டு, அதிகாரிகளால் ஒன்றும் நடக்காது என புரிந்துகொண்ட சுத்யா வேறுவழியில்லாமல் அந்த யோசனையை அமல்படுத்தினார். என்னவென்று, மரத்தில்மேல் வீடுகட்டி அங்கேயே இருந்துகொண்டார்.

Sudya at his tree house

விஷயம் தேசிய மீடியாவில் வர, இப்போது அவரின் விண்ணப்பம் வேகம் எடுத்திருக்கிறது. உடனடியாக சுத்யாவின் வீட்டிற்கு அதாவது மரத்திற்கு நேரில் சென்ற அதிகாரிகள், ”யோவ் யோவ் பெரிய மனசு பண்ணி கீழே இறங்குய்யா, எவ்ளோ சீக்கிரம் முடியுமோ உனக்கு வீடு ரெடி பண்ணிடறோம், அரசாங்கம் தரலேன்னா எங்க கை காசை போட்டாச்சும் உனக்கு வீடு கட்டிக்குடுத்தர்றோம், கொஞ்சம் மனசு வைய்யா, இல்லேன்னா எங்களை சஸ்பெண்ட் பண்ணிடுவாங்கய்யா” என கெஞ்ச, விரைவில் வீடு வேண்டும் என்ற கண்டிஷனுடன் அதிகாரிகள்மேல் மனமிரங்கி, மரமிறங்கியிருக்கிறார் சுத்யா. மயிலே மயிலே இறகு போடுன்னா போடுமா? போட வைக்கணும்!