”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” உலகச் சபையில் உரக்கப் பாடிய மோடி

கடந்த வெள்ளியன்று நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவைக் கூட்டம் நடைபெற்றது.

அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் பொது சபையில் பேசிய இந்திய பிரதமர் மோடியாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற சங்கத் தமிழ் பாடலை வாசித்து காண்பித்தது உலகத் தமிழர்களை பெருமை அடைய செய்துள்ளது.

கடந்த வெள்ளியன்று நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, சங்கத் தமிழ் பாடல் ஒன்றை எடுத்துக்காட்டிப் பேசினார்.

modi

எங்கள் நாட்டை சேர்ந்த மிக பெரிய புலவரான கணியன் பூங்குன்றனார், நாம் அனைத்து இடங்களுக்கும், அனைவருக்கும் சொந்தமானவர்கள் என்னும் பொருள்படயாதும் ஊரே யாவரும் கேளிர்என சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடியுள்ளார் என சங்கத்தமிழ் புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி பேசினார்.

அது மட்டும் இன்றி அந்த பாடலுக்கான அர்த்தத்தை எடுத்துக் கூறி தமிழ் மொழி பற்றியும், கவியின் பரந்த நோக்கம் பற்றியும் வியந்து பேசியது ஒட்டு மொத்த உலகத் தமிழர்களுக்கும் ஆனந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ இந்தியா விரும்புவதாக குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இந்தியாவின் சாதனைகளை பட்டியவிட்டு பேசினார்.

modi

சங்க காலப் புலவர்களில் ஒருவரான கணியன் பூங்குன்றனார் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகிபாலன்பட்டியில் பிறந்தவர். அவரது பாடலை சற்றுப் பார்ப்போம்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் பொது சபையில் பேசிய இந்திய பிரதமர் மோடி யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற சங்கத் தமிழ் பாடலை வாசித்து காண்பித்தது உலகத் தமிழர்களை பெருமை அடைய செய்துள்ளது.