யாகத்திற்கு செலவு செய்யும் பணத்தை குடிநீர் தேவைக்காக செலவிடலாம்- திருமா

 

யாகத்திற்கு செலவு செய்யும் பணத்தை குடிநீர் தேவைக்காக செலவிடலாம்- திருமா

மக்களின் நலனுக்காகவும்  தி.மு.க தலைமை ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். இதே கூட்டணி சிதறாமல் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். அதுவே தமிழகத்துக்கும் தேசத்துக்கும் நல்லது. 

மழை வேண்டி யாகம் நடத்த ஒதுக்கும் தொகையை குடிநீர் தேவைக்காக செலவிடலாம் என சிதம்பரம் தொகுதி எம்.பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினரும் ஆன திருமாவளவன், “ நாடாளுமன்றத்தில் தண்ணீர் பிரச்சினை குறித்து பேச முயன்றேன் ஆனால் பேச அனுமதிக்கவில்லை. தமிழகத்துக்கு குடிநீர் தேவையை சமாளிக்க சிறப்பு நிதி வழங்க வலியுறுத்தினேன். 

நாடாளுமன்ற தேர்தல் வேறு சட்டமன்ற தேர்தல் வேறு ஒவ்வொரு தேர்தலின் போதும் வெவ்வேறு கருத்துகள் வெளிவரும். தமிழகத்தின் நலன் கருதியும் நாட்டின் நலன் கருதியும் மக்களின் நலனுக்காகவும்  தி.மு.க தலைமை ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். இதே கூட்டணி சிதறாமல் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். அதுவே தமிழகத்துக்கும் தேசத்துக்கும் நல்லது. 

கோவில்களில் மழை வேண்டி யாகம் வளர்க்கும் தொகையை குடிநீர் தேவைக்காகக செலவிடலாம். நாடாளுமன்றத்தில் மிருகபலத்தை கொண்டு முத்தலாக் மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ரயில் மூலம் குடிநீர் வழங்கவதாக சொன்னத்தை ஏற்றுக்கொள்ளாமல் தமிழக அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்று தமிழக அரசினர் சொல்ல வருகிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.