மோதிக்கொள்ளும் திமுக – காங்கிரஸ் நிர்வாகிகள்: உடைகிறதா நீண்டகால கூட்டணி?

 

மோதிக்கொள்ளும் திமுக – காங்கிரஸ் நிர்வாகிகள்: உடைகிறதா  நீண்டகால கூட்டணி?

சொந்த செல்வாக்கில் வென்றதாக, திருநாவுக்கரசர் கூறியதே திமுக காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி ஏற்பட காரணம் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

சொந்த செல்வாக்கில் வென்றதாக, திருநாவுக்கரசர் கூறியதே திமுக காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி ஏற்பட காரணம் என கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டியுள்ளார். 

stalin

தண்ணீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  அந்த வகையில் திருச்சியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது. அதனால் திமுக வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில்  தனித்துப் போட்டியிட வேண்டும். இது குறித்து நான் தலைமையிடம் தெரிவிப்பேன்’ என்றார். திருச்சியில் முக்கிய புள்ளியாகவும், திமுகவில் முக்கிய நிர்வாகியாக உள்ள கே. என். நேருவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

nehru

இது குறித்து பலரும் கருத்தும் கூறி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகியான கராத்தே  தியாகராஜன் கூறும் போது, ‘சொந்த செல்வாக்கில் வென்றதாக, திருநாவுக்கரசர் கூறியதே திமுக காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி ஏற்பட காரணம். திமுகவின் எண்ணத்தை  தான் நேரு வெளிப்படுத்தியிருக்கிறார். திமுகவும் தோல்வியைச் சந்தித்துத் தான் வந்துள்ளது. அதனால் எங்களுக்கு பல்லக்கு தூக்க  யாரும் சொல்லவில்லை. இனிவரும் நிலையை தலைமைகள் தான் முடிவு செய்யும்’ என்றார்.

thiru

கராத்தே  தியாகராஜனின்  கருத்துக்கு திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பேசியுள்ள அவர், ‘சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றதாக தான் சொல்லவில்லை. கராத்தே தியாகராஜன் கூறுவது கண்டனத்திற்குரியது. கே.என்.நேரு எதற்காக பேசினார்? எந்த சூழலில் பேசினார் என்று எனக்கு தெரியாது’ என்றார்.  

நீண்டகாலமாக கூட்டணி கட்சிகளாக  இருந்து வரும் திமுக – காங்கிரஸின்  இந்த வார்த்தை போர் இரு தலைமைகள் தலையிட்டால் மட்டுமே முடிவுக்கு வரும் என்று அண்ணா அறிவாலயத்தில் முணுமுணுக்கப்படுகிறது.