மோடி 2.0 நூறு நாள் வேலை திட்டம் – ரயில்வே தனியார்மயம்?

 

மோடி 2.0 நூறு நாள் வேலை திட்டம் – ரயில்வே தனியார்மயம்?

நீங்க சொல்றதைப் பார்த்தா, போன ஆட்சி மாதிரி இருக்காது, இந்த தடவை இந்தியா நிச்சயம் வல்லரசாகிட்டுத்தான் ஓயும்போலன்னு நினைக்கிறீங்களா? முந்தைய ஆட்சிக்கு வந்தவுடன், வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு கொண்டுவருவதற்காக ஒரு கமிட்டியை மோடி அமைத்தார். அந்த கமிட்டி பணத்தை கொண்டுவந்து உங்கள் அக்கவுன்ட்டில் 15 லட்சம் போட்டதா? இல்ல தானே? அப்ப அதேதான் இப்பவும்.

மோடி அரசு இரண்டாம் முறையாக பதவியேற்றப்பின், ஒவ்வொரு துறையும் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான திட்டங்கள் அனைத்தும், முதல் நூறு நாட்களுக்குள் இறுதி முடிவெடுக்கப்பட்டு கேபினட் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ரயில்வேதுறையும் தங்கள் துறைரீதியாக செயல்படுத்தப்பட இருக்கும் முக்கியமான 11 திட்டங்கள் குறித்து விவாதித்து வருகிறது. இவற்றுள் முக்கியமானது, இரண்டு ரயில்களையும், சில ரூட்களையும் தனியாருக்கு தாரைவார்த்து எப்படி செயல்படுத்துகிறார்கள் என்று பார்ப்பதாம்.

Railways

மேலும், டெல்லி – அவுரா, டெல்லி – மும்பை வழித்தடங்களை 14,000 கோடி ரூபாயில் தரம் உயர்த்தி பயண நேரத்தை 5 மணி நேரங்கள் வரையிலும் குறைப்பது ஒன்று. தற்போது டெல்லி – அவுரா பயண நேரம் 17 மணி நேரமாகவும், டெல்லி – மும்பைக்கு 15.5 மணி நேரங்களாகவும் உள்ளது. இதனை 12 மற்றும் 10 மணிநேரங்களாக குறைக்க, இந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கிலோமீட்டரிலிருந்து 160 கிலோமீட்டர்களாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Indian Railways

இதுபோக 6,485 ஸ்டேஷன்களில் வை-ஃபை வசதி ஏற்படுத்துவது, 2,568 ஆளில்லா லெவல் கிராசிங்குகளை ஒழித்து ஆட்களை பணியில் அமர்த்துவது, மற்றும் 50 ஸ்டேஷன்களை தரம் உயர்த்துவது உள்ளிட்ட 11 முக்கியமான திட்டங்களை இந்த 100 நாள் திட்டத்தில் ரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. நீங்க சொல்றதைப் பார்த்தா, போன ஆட்சி மாதிரி இருக்காது, இந்த தடவை இந்தியா நிச்சயம் வல்லரசாகிட்டுத்தான் ஓயும்போலன்னு நினைக்கிறீங்களா? முந்தைய ஆட்சிக்கு வந்தவுடன், வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு கொண்டுவருவதற்காக ஒரு கமிட்டியை மோடி அமைத்தார். அந்த கமிட்டி பணத்தை கொண்டுவந்து உங்கள் அக்கவுன்ட்டில் 15 லட்சம் போட்டதா? இல்ல தானே? அப்ப அதேதான் இப்பவும்.