மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை – விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்

 

மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை – விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

‘மிஷன் சக்தி’ சோதனை

மக்களவைத் தேர்தல் வரும் 11 -ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமலில் இருக்கும் நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி ஒரு முக்கியமான விஷயத்தை தெரிவிக்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது நாடு முழுவதும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

மோடி

பிரதமர் மோடி அவரது உரையில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’ சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்ததாகத் தெரிவித்தார்.

விதிமுறைகள் மீறப்பட்டதா ?

ஆனால் தேர்தல் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன.

மோடி

இந்நிலையில் மிஷன் சக்தி திட்டம் பற்றிய பிரதமர் நரேந்திர மோடியின் உரை குறித்து தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. இந்த உரை மூலம் பிரதமர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி விட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால்  இந்திய தேர்தல் ஆணையம் ‘மிஷன் சக்தி’ குறித்த பிரதமர் மோடியின் பேச்சு தேர்தல் நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பிரதமரின் உரை குறித்து பதிலளிக்க தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க 

காலி சேர்களை போட்டோ எடுத்தால் பத்திரிகையாளரா இருந்தாலும் அடிப்போம்: பாஜகவினர் கோபம்?!