மோடி துதி… அமித்ஷா கோட்… ஓ.பி.எஸ், ஓ.பி.ஆர் இடையே கடும் போட்டி!

மோடி துதி… அமித்ஷா கோட்… ஓ.பி.எஸ், ஓ.பி.ஆர் இடையே கடும் போட்டி!

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் இடையே பா.ஜ.க-வுக்கு நெருக்கமானவன் யார் என்று காட்டுவதில் கடும் போட்டியே வந்துவிட்டது என்று கூறும் அளவுக்கு இருவரும் நடந்துகொண்டதாக அ.தி.மு.க-வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ops

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில மாதங்களுக்கு இங்கிலாந்து, அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். தற்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் 10 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்று வந்துள்ளார். 

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏ.சி.சண்முகம் நடத்தும் பல்கலைக் கழகத்திலிருந்து ஒரே ஒரு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் ஓ.பன்னீர் செல்வமோ பண்பின் சிகரம், வீரத்தமிழன் விருது, சர்வதேச வளரும் நட்சத்திரம் விருது. மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸலன்ஸ் பதக்கம் என்று பல விருதுகளையும் பட்டங்களையும் வாங்கிக் குவித்தார். முதல் நாளில், வேஷ்டி சட்டை அணிந்து, மேலே கோட் அணிந்திருந்த ஓ.பி.எஸ்… பிறகு கடும் குளிர் காரணமாக முழு கோட், சூட்டுக்கு மாறினார்.

ops

பிறகு, ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைப்பது தொடர்பான சந்திப்பின்போது மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான அமித்ஷா அணிவது போன்ற கோட் அணிந்தார். தலைவர் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டாரா என்று அ.தி.மு.க தொண்டர்களே கிண்டல் செய்யும் அளவுக்கு அவருடைய உடை இருந்தது.  

ops

ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கும் அப்பாவுக்கு டஃப் பைட் கொடுத்தார். “நான் மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன். உலகில் மிகச்சிறந்த தலைவர். மிகச்சிறந்த அறிவாளி, வலிமை மிக்கவர்” என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். அப்பா, மகனின் செயல்கள் அ.தி.மு.க தொண்டர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது. இது தொடர்பான குற்றச்சாட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காதுவரை கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுறது.