மோடி சர்காரை வீழ்த்தாமல் ஓயமாட்டோம்: 500 பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்

 

மோடி சர்காரை வீழ்த்தாமல் ஓயமாட்டோம்: 500 பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்

மோடி அரசாங்கம், 50 வயதுக்கு மேற்பட்ட 50,000-க்கும் அதிகமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களை விருப்ப ஓய்வு பெற சொல்லி வற்புறுத்துகிறது.

தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாய் செயல்பட்டு அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் மோடி சர்காரை வீழ்த்தாமல் ஓயமாட்டோம் என் பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி, ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் 500 பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

bsnl

மோடி அரசாங்கம், 50 வயதுக்கு மேற்பட்ட 50,000-க்கும் அதிகமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களை விருப்ப ஓய்வு பெற சொல்லி வற்புறுத்துகிறது. டெலிகாம் துறையை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க பார்க்கிறது என பிஎஸ்என்எல் யூனியன் அதிகாரி அபிமன்யூ தெரிவித்தார்.

பொதுப்பணித்துறையை  தனியார்மயமாக்கும் சதி நடைபெற்று வருகிறது. இதனால் அரசாங்க ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

modi

டெலிகாம் துறையை மூன்று தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முயற்சியை மோடி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறியதை மேற்கோள் காட்டி பிஎஸ்என்எல் ஊழியர்கள் பேசினர். அடுத்த முறை மோடி ஆட்சியில் இருக்கமாட்டார், மோடி சர்காரை வீழ்த்தாமல் ஓயமாட்டோம் என பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோஷமிட்டனர்.