மோடி அறிவிப்பு வரை காத்திருக்காத மே.வங்கம், மகாராஷ்டிரா! – ஊரடங்கை நீட்டித்து உத்தரவு

மோடி அறிவிப்பு வரை காத்திருக்காத மே.வங்கம், மகாராஷ்டிரா! – ஊரடங்கை நீட்டித்து உத்தரவு

ஊரடங்கை நீட்டிப்பது என்று பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், அவருடைய அறிவிப்பு வெளியாகும் வரை கூட காத்திருக்காமல் ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் உத்தவ் தாக்கரே.

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாக உள்ளது. அங்கு ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், அங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். 

uddhav-thackerey-89

ஏற்கனவே ஒடிஷா, பஞ்சாப் மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளன. மூன்றாவதாக மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்துள்ளது. அதேபோல் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், சமூக பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை மேற்கொண்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

mamta-banerjee-78

இன்று பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் இன்று அல்லது நாளை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பை மோடி வெளியிடுவார் என்று கூறப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்னும் முடியவில்லை. அதற்குள்ளாக, மோடி அறிவிப்பதற்கு முன்னதாகவே அவசர அவசரமாக மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்துள்ளன. தமிழகமும் இன்று மாலை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.