மோடியை வெறுப்பதைவிட்டுட்டு தேசத்தை நேசியுங்கள்: எதிர்க்கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்த விவேக் ஓபராய் 

 

மோடியை வெறுப்பதைவிட்டுட்டு தேசத்தை நேசியுங்கள்: எதிர்க்கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்த விவேக் ஓபராய் 

மோடியை வெறுப்பதைவிட்டுட்டு தேசத்தை நேசியுங்கள் என்று எதிர்க்கட்சியினருக்கு நடிகர் விவேக் ஓபராய் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சென்னை: மோடியை வெறுப்பதைவிட்டுட்டு தேசத்தை நேசியுங்கள் என்று எதிர்க்கட்சியினருக்கு நடிகர் விவேக் ஓபராய் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல் 3:00 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 345 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 91 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

மத்தியில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டதால், பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் பாலிவுட் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘நரேந்திர மோடிக்கு எதிராக ஒன்றிணைந்த அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள். மோடியை வெறுப்பதற்கு சிறிது நேரமும், தேசத்தை நேசிப்பதற்கு அதிக நேரமும் செலவிடுங்கள். ஜனநாயகம் தழைக்க எதிர்க்கட்சிகள் திறம்பட செயல்பட வேண்டும் ஜெய்ஹிந்த்’ என்று பதிவிட்டுள்ளார்.