மோடியின் வீழ்ச்சிக்குப் பின்னால் பிரக்யா சிங் இருப்பார்! – ம.பி அமைச்சர் விமர்சனம்

மோடியின் வீழ்ச்சிக்குப் பின்னால் பிரக்யா சிங் இருப்பார்! – ம.பி அமைச்சர் விமர்சனம்

மோடியின் வீழ்ச்சிக்கு போபால் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர்தான் காரணமாக இருக்கப் போகிறார் என்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலேக்கான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருபவர் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர். பல ஆண்டுகள் சிறையிலிருந்த பிரக்யா, உடல்நிலையைக் காரணம் காட்டி ஜாமீன் பெற்றார். அதன்பிறகு பா.ஜ.க சார்பில் போபால் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி-யும் ஆனார்

sadhvi

. நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் பற்றிய நாடாளுமன்ற குழு உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கேட்சே ஒரு தேசபக்தர் என்று பேசவே, நிலைக்குழு உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் சாத்வி பிரக்யா.

college

இந்தநிலையில், போபாலில் உள்ள மோபன்லால் சதுர்வேதி பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சாத்வி பிரக்யா சென்றார். அப்போது மாணவர்கள் கோஷங்களை எழுப்பி அவரை தடுத்து நிறுத்தினர். பயங்கரவாதி என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பி பிரக்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

sajjan

இது குறித்து மத்தியப் பிரதேச அமைச்சர் சஜ்ஜன் சிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது, “பிரக்யா தாகூரைப் பார்த்ததும் பயங்கரவாதியை வெளியே அனுப்புங்கள் என்று சிறுவர்கள் கோஷமிட்டதைப் பார்த்தேன். பிரக்யா சிங் விமானத்தில், ரயிலில், சாலையில் என எதில் பயணித்தாலும், எங்கு சென்றாலும் அவருக்கு எதிரான கோஷங்கள் எழுவதைக் காண முடிகிறது. அவர் தன்னை குடியரசுத் தலைவருக்கும் மேலானவர் என்று நினைத்து அதன்படி நடந்துகொள்கிறார். மோடியின் வீழ்ச்சிக்குக் காரணமாக இவர் இருப்பார்.

pragya

பல்கலைக் கழக போராட்டம் குறித்து சாத்வி கூறுகையில், “நான் ஒரு பயங்கரவாதி என்று என்.எஸ்.யு.ஐ உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த முழக்கம் இழிவானது, சட்டவிரோதமானது. அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்வது மற்றும் பெண்ணை, அதுவும் பெண் துறவியை அவமதிப்பது தேச விரோதமாகும். இப்படி நடந்துகொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயல்வேன். இவர்களுக்கு எதிரான நடவடிக்கை மிகவும் அவசியம்” என்றார்.