மோடியின் அடுத்த பிளான் அனைத்து மாநிலத்திற்கும் ஒரே முதலமைச்சர் – சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

 

மோடியின் அடுத்த பிளான் அனைத்து மாநிலத்திற்கும் ஒரே முதலமைச்சர் – சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

ஆணவக்கொலை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும். சில மாநிலங்களில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது, ஆனால் தமிழகத்தில் இச்சட்டத்தை ஏற்க தமிழக அரசு தயாராக இல்லை. 

மோடியின் அடுத்த பிளான் அனைத்து மாநிலத்திற்கும் ஒரே முதலமைச்சர் – சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

மோடி ஏதோ சாதனை செய்துவிட்டது போல ரஜினிகாந்த் பேசி வருகிறார் இது உண்மைக்கு புறம்பானது எந்த நோக்கத்துக்காக இதை பேசுகிறார் என்று தெரியவில்லை  என சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மூன்றாவது மாநில மாநாடு தஞ்சையில் தொடங்கியது. மாநாட்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், “ஆணவக்கொலை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும். சில மாநிலங்களில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது, ஆனால் தமிழகத்தில் இச்சட்டத்தை ஏற்க தமிழக அரசு தயாராக இல்லை. 

அரசியல் அமைப்பு சட்டத்தை மோடி அரசு மாற்ற முயற்சித்து கொண்டிருக்கிறது.மோடி ஏதோ சாதனை செய்துவிட்டது போல ரஜினிகாந்த் பேசி வருகிறார் இது உண்மைக்கு புறம்பானது எந்த நோக்கத்துக்காக இதை பேசுகிறார் என்று தெரியவில்லை. ஏற்கனவே அரசியலுக்கு வருவதாகவும் அனைத்து சட்டமன்ற தேர்தலில் தொகுதிகளிலும் போட்டியிடுவதாக சொல்லியிருந்தார். அரசியலுக்கு அச்சாரம் போடும் வகையில் அவரது பேச்சு உள்ளது. மேலும்
 காஷ்மீர் பிரச்சினை அரசியல் ஆகிவிட்டது. இந்நிலையில் காஷ்மீர் பிரச்சனையை பற்றி பேசுவதே அரசியல் தான். 

மோடியை நியாயப்படுத்துவது அரசியல் தான். அதை எதிர்ப்பதும் அரசியல் தான்.
 மோடி அரசு நாட்டின் நிர்வாகத்தை முழுக்க முழுக்க மாற்றி அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் அனைத்து மாநிலத்திலும் ஒரே முதலமைச்சர் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்.
 காவிரி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விவசாயிகள் சாகுபடி தொடங்குவதற்கு ஏதுவாக பயிர் கடன் விதை நெல் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும்” என்று கூறினார்