’மோடியால் உயிருக்கு ஆபத்து…’ கதறி கதறி அழும் பிக் பாஸ் ஜூலி..!

 

’மோடியால் உயிருக்கு ஆபத்து…’ கதறி கதறி அழும் பிக் பாஸ் ஜூலி..!

மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் நாம் எல்லாம் இருப்போமா? இல்லையா? என்பதே சந்தேகம். ஆனால் இது ஒன்றும் முடிவல்ல. வருகிற 23-ம் தேதி எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வெற்றியை கொடுப்பார்’’ என்றும் அழும் குரலில் நா தழுதழுக்க பேசியுள்ளார்.

வெளியான அனைத்து கருத்து கணிப்புகளுமே மத்தியில் மீண்டும் மோடி ஆட்சியை பிடிப்பார் என்றும் குறைந்தது 240 இடங்கள் முதல் அதிகபட்சம் 350 இடங்கள் வரை பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளன.ஜூலி

இதன் எதிரொலி தேசிய அரசியலில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும்  எதிரொலித்துள்ளது. குறிப்பாக விஜயின் தந்தை சந்திரசேகர் அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டு அலையப்போகிறோம் என்று பாஜகவை குறிவைத்து  பேசி இருந்தார். திமுகவை சேர்ந்த பிரசன்னா மோடி மீண்டும் பிரதமரானால் அரசியலில் இருந்து விலகவும் தயார் என பரபரப்பை ஏற்படுத்தினார்.

சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் விரக்தியின் உச்சத்திற்கே சென்று நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இவையெல்லாம்  மிஞ்சும் அளவிற்கு தற்போது ஜூலி அதாவது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தன்னை தமிழச்சியாக அடையாளப்படுத்திக்கொண்டு, ’ஊரு சுத்தும் மோடி மதுரை பக்கம் வாடி’ என்று கத்தி பிரபலமானவர்.ஜூலி

அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது சுயரூபம் தெரியவர தொடங்கியது. தற்போது ஜூலி கதறல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ’’நாம் எவ்வளவுதான் மக்கள் இடத்தில் மாற்றத்தை விதைத்தாலும், அது நடக்க போறது இல்லை. மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் நாம் எல்லாம் இருப்போமா? இல்லையா? என்பதே சந்தேகம். ஆனால் இது ஒன்றும் முடிவல்ல. வருகிற 23-ம் தேதி எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வெற்றியை கொடுப்பார்’’ என்றும் அழும் குரலில் நா தழுதழுக்க பேசியுள்ளார்.ஜூலி

ஜூலி கலைஞர் தொலைக்காட்சியின் ஓடி விளையாடி பாப்பா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் என்பதும் அவர் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை காதலித்து வருகிறார்.