மோடிகளின் சுவிஸ் வங்கி கணக்குகளை முடக்கிய அதிகாரிகள்!

 

மோடிகளின் சுவிஸ் வங்கி கணக்குகளை முடக்கிய அதிகாரிகள்!

இந்திய வங்கியில் மோசடி செய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பியோடிய நீரவ் மோடி மற்றும் அவரது சகோதரி புர்வி மோடியின் 4 சுவிஸ் வங்கி கணக்குகளை அந்நாட்டு அதிகாரிகள் முடக்கினர்.

இந்தியாவின் பிரபல வைர வியாபாரியாக திகழ்ந்தவர் நீரவ் மோடி. பெரிய தொழிலதிபர்ன்னு நினைச்சு பஞ்சாப் நேஷனல் வங்கி நீரவ் மோடிக்கு கடனை கொடுத்தது. ஆனால் அவர பாருங்க சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு அந்த வங்கிக்கு பட்டை நாமம்  போட்டு விட்டார். இந்த மோசடி விவகாரம் வெளியே தெரிந்தவுடன் நைசாக வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார்.

புர்வி மோடி

இதற்கிடையே வங்கி மோசடி விவகாரத்தை அமலாக்கத்துறை கையில் எடுத்து தனது விசாரணை தொடங்கியது. விசாரணையில் நீரவ் மோடியும், அவரது மாமாவும் வங்கி மோடியில் சம்பந்தப்பட்டு இருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. இதனையடுத்து வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியை மத்திய அரசு தேட தொடங்கியது. மெகுல் சோக்சி ஆண்டிகுவாவிலும், நீரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.

இங்கிலாந்தில் சுதந்திரமாக சுற்றி திரிந்த நீரவ் மோடியை அந்நாட்டு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. மேலும், ஜாமீன் கேட்டு நீரவ் மோடி தாக்கல் செய்த மனுக்களை இங்கிலாந்து நீதிமன்றம் தொடர்ந்து  4 முறை தள்ளுபடி செய்தது. தற்போது இங்கிலாந்து சிறையில் நீரவ் மோடி உள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி

நீரவ் மோடி மற்றும் அவரது சகோதரி புர்வி மோடிக்கு சுவிட்சர்லாந்தில் வங்கி கணக்குகள் உள்ளன. சட்டவிரோத பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ், இந்த வங்கி கணக்குகளை முடக்கும்படி சுவிஸ் அரசுக்கு இந்திய அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்தது. அங்கு நீரவ் மோடி மற்றும் அவரது சகோதரிக்கும் மொத்தம் 4 கணக்குகள் உள்ளன. அந்த கணக்குகளில் நீரவ் மற்றும் புர்வி முறையே ரூ.261 கோடி மற்றும் ரூ.283 கோடி டெபாசிட் செய்து இருந்தனர். தற்போது அந்த வங்கி கணக்குகளை இந்திய அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று சுவிஸ் அதிகாரிகள் முடக்கிவைத்துள்ளனர்.