மோசமான கிஃப்ட் கொடுத்து மகளை ஏமாற்ற நினைத்த அப்பா…கடைசியில் ஏமாந்தது தான் மிச்சம்: வைரல் வீடியோ!

 

மோசமான கிஃப்ட்  கொடுத்து மகளை ஏமாற்ற நினைத்த அப்பா…கடைசியில் ஏமாந்தது தான் மிச்சம்: வைரல் வீடியோ!

தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ttn

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகக் குழந்தைக்கு கிஃப்ட் கொடுக்க வேண்டும்  என்று நினைத்த தந்தை குழந்தையை விளையாட்டாக ஏமாற்ற நினைத்து  ஒரு கவரில் வாழைப்பழத்தை சுற்றி கொடுக்கிறார். குழந்தையும் அதை  ஆவலுடன் பிரிக்கிறது. அப்போது கவருக்குள்  வாழைப்பழம் இருப்பதை  பார்த்து விட்டு ‘பனானா, பனானா’ என மகிழ்ச்சியில்  ஆரவாரம் செய்துகொண்டே அதை தனது அம்மாவிடம் கொடுத்து உரிக்க சொல்லி சாப்பிடுகிறது.

இதை வீடியோவாக எடுத்த குழந்தையின் தந்தை, குழந்தைக்கு ஒரு மோசமான கிறிஸ்துமஸ் பரிசை கொடுத்து ஏமாற்ற நினைத்தேன். ஆனால்  அவள் இப்படி மகிழ்ச்சியாக இருப்பாள் என்று நினைக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார். அப்பா கொடுத்த பரிசை அன்போடு வாங்கி கொண்ட அந்த குழந்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.