மோக தாகத்தால் தவிக்கும் தமிழ்நாடு -250%குழந்தைகளுக்கெதிரான குற்றம் அதிகரிப்பு -“போக்ஸோ” வால்   நிறையும் புழல் சிறை…. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்

மோக தாகத்தால் தவிக்கும் தமிழ்நாடு -250%குழந்தைகளுக்கெதிரான குற்றம் அதிகரிப்பு -“போக்ஸோ” வால்   நிறையும் புழல் சிறை….  கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்

நாட்டில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் 250 %அதிகரித்து அபாய நிலையில் உள்ளது என்று குழந்தைகள் நல வாரிய தகவல் கூறுகிறது .
தமிழ்நாட்டில் தினமும் சிறுமிகள் பலாத்கார செய்திகள் வராத நாளே இல்லை எனலாம் .அந்தளவுக்கு இங்கு சிறுவர் சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது .இதற்கு செல்போனில் வரும் ஆபாச படங்களும் ஒரு காரணம் எனலாம் .

porn

சமீபத்தில் குழந்தைகள் நல வாரியம் தேசிய குற்றப்பதிவில் வெளியிட்டுள்ள தகவல் படி 2018ம் ஆண்டு 18%அதிகரித்துள்ளதாகவும் ,கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தமிழகத்த்தில் 250%குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் பெருகியுள்ளதாகவும் கூறுகிறது .இதில் பாதிக்கு மேல் போக்ஸோ சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள்,மேலும் 18%கடந்த ஆண்டில் மட்டும் அதிகரித்துள்ளது .இது  தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு என்றும் ,இது மிக கவலைக்குரிய விஷயம் என்றும் குழந்தைகள் அமைப்பின் அட்வகேட் கிறிஸ்துராஜ் சவரிநாயகம் கூறினார் .

abuse

கடந்த ஆண்டில் மட்டும் 4155 குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தமிழகத்தில் நடந்துள்ளது ,இது இந்திய அளவில் 3%ஆகும் .மேலும் இந்தியாவில் சிறுமிகளுக்கெதிரான குற்றம் அதிகம் நடைபெறும் ஐந்து மாநிலங்களவை தமிழ்நாடும் ஒன்றாம் .

abuse

தென்னிந்தியாவின் CRY இயக்குனர் கார்த்திக் நாராயணன் இது பற்றி கூறும்போது,குற்றவாளிகள் புது புது யுக்திகளை கையாண்டு சிறுவர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் ,நிறைய படித்தவர்கள் மத்தியில் இது அதிகம் நடைபெறுவதாகவும் ,எதிர்காலத்தில் போக்ஸோ சட்டத்தால் சிறைகள் நிரம்புமெனவும் ,பள்ளிகளில்  விழிப்புணர்வு பிரச்சாரம் குழந்தைகளிடையே மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறினார் .
மேலும் இது போல் குற்றங்களை குறைக்க போலீசார் குற்றம் புரிவோர் பட்டியலை தயாரித்து  பார்க் ,பீச் போன்ற இடங்களில் சிறுவர்களை பாதுகாத்து குற்றவாளிகளை கண்காணிக்கவேண்டுமென கூறினார் .