மொத்த கடனே ரூ.4,970 கோடி தாங்க…அதையும் கொடுத்து விடுவோம். காபி டே நிறுவனம் தகவல்…

 

மொத்த கடனே ரூ.4,970 கோடி தாங்க…அதையும் கொடுத்து விடுவோம். காபி டே நிறுவனம் தகவல்…

கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்ட வி.பி. சித்தார்த்தாவின் காபி டே குழுமத்துக்கு மொத்தம் ரூ.4,970 கோடி கடன் உள்ளதாகவும், அதனையும் கடன்தாரர்களுக்கு திருப்பி கொடுத்து விடுவோம் என காபி டே என்டர்பிரைசஸ் தெரிவித்துள்ளது.

மொத்த கடனே ரூ.4,970 கோடி தாங்க…அதையும் கொடுத்து விடுவோம். காபி டே நிறுவனம் தகவல்…

காபி டே குழுமத்தின் நிறுவனவரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனுமான வி.பி. சித்தார்த்தா  கடந்த மாதம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடன் பிரச்சினை, வரி அதிகாரிகள் டார்ச்சர் போன்றவற்றால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சித்தார்த்தா மறைவு காபி டே குழுமத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 

இருப்பினும், காபி டே குழுமம் தற்போது அதிலிருந்து மீண்டு வரத் தொடங்கி விட்டது. காபி டே என்டர் பிரைசஸ் நிறுவனம் காபி டே குழுமத்தின் மொத்த கடன் விவரங்களை பங்குச் சந்தை அமைப்பிடம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், காபி டே குழுமத்துக்கு மொத்தம் ரூ.4,970 கோடி கடன் உள்ளது.

காபி டே கிளை

மொத்த கடனில் ரூ.4,796 கோடி பாதுகாப்பான (உத்தரவாத இணை) கடன் அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. ரூ.174 கோடி  கடன்  உத்தரவாத இணை கொடுக்காமல் வாங்கப்பட்டுள்ளது. கடன்தாரர்கள் அனைவருக்கும் கடன் திருப்பி கொடுக்கப்படும். குளோபல் வில்லேஜ் டெக் பார்க் நிறுவனத்தை விற்பனை வாயிலாக கிடைக்கும் பணத்தை கடன்தாரர்களுக்கு கொடுப்பதன் வாயிலாக குழுமத்தின் மொத்த கடன் ரூ.2,400 கோடி குறையும் என தெரிவித்துள்ளது.

காபி டே குழுமத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.