‘மொத்த இந்தியாவையும் காஷ்மீர் ஆக்கிவிட்டார்கள்’ -மெகபூபா முப்தி கிண்டல்

‘மொத்த இந்தியாவையும் காஷ்மீர் ஆக்கிவிட்டார்கள்’ -மெகபூபா முப்தி கிண்டல்

கடந்த ஆகஸ்ட்டு மாதத்தில் ஆர்டிகிள் 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இண்டெர் நெட் வசதி துண்டிக்கபட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. 

370

வெளியுலகோடு தொடர்பில்லாமல் இருக்கும் காஷ்மீர் தலைவர்களில் ஒருவர் மெஹபூபா முப்தி.இவர் பிஜேபியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தவர், இப்போது யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டு இருக்கும் ஒன்று பட்ட காஷ்மீரின் கடைசி முதல்வர்.முன்னாள் மத்திய அமைச்சர் முப்தி முகமது சையதின் மகளான பெஹபூபா முப்தி.பி.டி.பி கட்சியின் தற்போதைய தலைவரான இவரது ட்விட்டர் கணக்கை இவரது மகள் கையாள்கிறார்.அதன் மூலம் அவ்வப்போது தன் கருத்துகளை வெளியிட்டு வருகிறார் மெஹ்பூபா.

m

அண்மையில் மத்திய அரசு குடியுரிமை சட்ட மசோதா கொண்டுவந்ததைத் தொடர்ந்து நாடெங்கும் கடும் போராட்டங்கள். போலீஸ் தாக்குதல், வாகனங்களுக்கு தீ வைப்பு,144 தடைச் சட்டம்,துப்பாக்கி சூடு என்று இந்தியா மொத்தமும் கலவர பூமியானது.டெல்லி ,லக்னோ,போன்ற நகரங்கள் உட்பட நாட்டின் பல இடங்களில் இண்டர் நெட் வசதி தடைசெய்யப்பட்டு விட்டது.

riot

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டி இருக்கும் மெஹபூபா முஃப்தி,’காஷ்மீரில் நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள இனி நீங்கள் காஷ்மீர் வர வேண்டியதில்லை. இப்போது மொத்த இந்தியாவையும்  காஷ்மீர் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்’ என்று கிண்டலடித்து இருக்கிறார்.