மொத்தம் 9 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் – எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு

 

மொத்தம் 9 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் – எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு

மொத்தம் 9 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட உள்ளதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

ரோம்: மொத்தம் 9 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட உள்ளதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த எல்.ஜி நிறுவனம் தன்னுடைய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு புதிய இயங்குதள அப்டேட்களை வழங்கியதாக வரலாறு இல்லை. மற்ற நிறுவனங்கள் அடிக்கடி தங்கள் மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், மொத்தம் 9 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட உள்ளதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது எல்.ஜி வி40 தின்க், எல்.ஜி வி50 தின்க், எல்.ஜி ஜி8 எக்ஸ் தின்க், எல்.ஜி ஜி8 எஸ் தின்க், எல்.ஜி ஜி7 தின்க், எல்.ஜி கே50 எஸ், எல்.ஜி கே40 எஸ், எல்.ஜி க்யூ60 மற்றும் எல்.ஜி கே50 ஆகிய மாடல்களுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் அளிக்கப்பட உள்ளது.

lg

முதலில் வருகிற பிப்ரவரி மாத தொடக்கத்தில் எல்.ஜி வி50 தின்க் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து படிப்படியாக இந்தாண்டு இறுதிக்குள் மேற்கண்ட மற்ற எல்.ஜி மாடல் சாதனங்களுக்கும் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்படும் என்று இத்தாலியில் எல்.ஜி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கண்ட சாதனங்கள் யாவும் இத்தாலியில் உள்ள மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் அளிக்கப்பட உள்ளதாகவே இதுவரை தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மற்ற நாடுகளுக்கும் இது பொருந்துமா என்பது பற்றி இதுவரை தகவல் ஏதும் இல்லை.