மைக்ரோ அவனில் மணக்க மணக்க கேரட் கோப்தா

 

மைக்ரோ அவனில் மணக்க மணக்க கேரட் கோப்தா

மைக்ரோ அவனில் மணக்க மணக்க கேரட் கோப்தா

 

தேவையான பொருட்கள்:

கிரேவிக்கு:

வெங்காயம் – 2
தக்காளி – 2
மிளகாய்த்தூள் – கால் ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
கரம் மசாலா – கால் ஸ்பூன்.

கோப்தா செய்ய:

கேரட் – 2
ரொட்டித்துண்டு – 2
பச்சை மிளகாய் – 1
இஞ்சி விழுது – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஆம்சூர் பொடி – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – கால் ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்
கிஸ்மிஸ் – 10.

செய்முறை:
வெங்காயத்தை அரைக்கவும்.  தக்காளியை சாறு எடுக்கவும்.  கேரட்டைத் துருவிக் கொள்ளவும்.

ரொட்டித் துண்டை மைக்ரோவேவ் தட்டில் 6 நிமிடங்கள் வைத்து எடுத்து தூள் செய்து கொள்ளவும்.  பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

கிரேவி  மைக்ரோவேவ் பாத்திரத்தில் கிரேவிக்கு  உள்ள எல்லாவற்றையும் (தக்காளியைத்  தவிர) நன்றாக கலந்து மைக்ரோ – ஹையில் 8 நிமிடங்கள் வைக்கவும்.  

இதில் தக்காளி சாற்றை கலந்து 7 நிமிடங்கள் ஹை – யில் வைக்கவும். 
அதில் தண்ணீர் 1 மற்றும் அரை கப் கலந்து  6 நிமிடங்கள் ஹையில் வைத்து எடுத்து வைக்கவும்.

கோப்தா
துருவிய கேரட்டுடன் (தயிர், கிஸ்மிஸ் இல்லாமல்) எல்லாவற்றையும் கலக்கவும்.  

அதனுடன் தயிரைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.  அதை பத்து பாகங்களாக பிரிக்கவும்.  

ஒவ்வொன்றின் நடுவிலும் கிஸ்மிஸ் வைத்து உருண்டைகளாக உருட்டவும்.

அதை மைக்ரோவேவ் தட்டில் லேசாக எண்ணெய் தடவி அதில் உருண்டைகளைப் பரப்பி 3 நிமிடங்கள் வைக்கவும்.

பரிமாறுவதற்கு  முன் கோப்தாவை கிண்ணத்தில் வைத்து அதன் மேல் கிரேவியை ஊற்றி மைக்ரோ – ஹையில் 2 நிமிடங்கள் வைத்து எடுத்துப் பரிமாறவும்.