மே 29 வரை ஊரடங்கு நீட்டிப்பு…தெலங்கானா அரசு அதிரடி!

 

மே 29 வரை ஊரடங்கு நீட்டிப்பு…தெலங்கானா அரசு அதிரடி!

அதே சமயம் மாநிலங்கள் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், குறைவான பகுதிகள் என தரம் பிரித்து அதற்கு ஏற்ப தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. 

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

tt

இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.  அதே சமயம் மாநிலங்கள் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், குறைவான பகுதிகள் என தரம் பிரித்து அதற்கு ஏற்ப தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. 

tt

 இந்நிலையில் தெலங்கானா அரசு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கை மே29 வரை  நீட்டித்துள்ளது.  இதுகுறித்து கூறியுள்ள அம்மாநில முதல்வர், “மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் அனைத்தும் பொருந்தும். இருப்பினும் சிவப்பு மண்டலங்களில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்படும். மக்கள் காலை முதல் இரவு 7 மணிவரை பொருட்களை சென்று வாங்கி கொள்ளலாம். இரவு 7 மணிமுதல் காலை 7 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும். ஹைதராபாத் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் நிலைமை மோசமாக உள்ளது. அதனால் அங்கு கட்டுபாடுகள் தீவிரமாக்கப்படும்” என்று கூறியுள்ளார்.