மேஷ ராசி குருபெயர்ச்சி பலன்கள்(2018-2019)

 

மேஷ ராசி குருபெயர்ச்சி பலன்கள்(2018-2019)

மேஷ ராசிக்கு 2018 குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை வழங்கும் என்பதை பற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

மேஷம்:

மேஷ ராசிக்கு அதிபதியாக செவ்வாய் விளங்குவதால் நீங்கள் மிகவும் தைரியமும், தன்னம்பிக்கையும் உடையவர்களாக விளங்குவீர்கள்.உங்கள் ராசிக்கு 9 மற்றும் 12 க்கு  அதிபதியான குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்தில் இருந்து சகல நன்மைகளையும் செய்து வந்தார்.

குரு பகவான் வருகின்ற அக்டோபர் மாதம்  4 ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடமாகிய விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு,வயிற்று கோளாறு, பிள்ளைகளால் நிம்மதி குறைவு,பணவரவில் தடை,சுப காரிய முயற்சிகளில் தடை,நெருகியவர்களிடையே பகை,தொழில் வியாபாரத்தில் மந்த நிலை,உத்தியோகத்தில் நெருக்கடிகள் இது போன்ற சாதகமற்ற பலன்களை வரக்கூடிய குருபெயர்ச்சி தர இருப்பதால் வியாழக்கிழமை தோறும் அருகில் உள்ள குரு ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து வர குருவினால் ஏற்படும் தேவையற்ற விரயங்களை தவிர்க்கலாம். மேலும் அவர் அவர் ஜென்ம நட்சத்திர நாளில் அருகில் உள்ள பிரசித்திபெற்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று வர குருவினால் ஏற்படும் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தினை பார்ப்பதால் அந்நிய முதலீடுகள் மூலம்  ஏற்படும் நன்மைகள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் .வெளிநாடு செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டமாக இந்த குருபெயர்ச்சி அமைந்துள்ளது .

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 2 ஆம் இடமான தனம் மற்றும் குடும்ப ஸ்தானத்தினை பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், மேலும் வருமானம் கணிசமாக உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகம், சுப காரிய நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 4 ஆம் இடமான சுக ஸ்தானத்தினை குரு பார்ப்பதால் வீடு மற்றும் நிலம் வாங்கும் யோகமும்,வீடு மாறும் யோகமும் உண்டாகும் மேலும் சொத்துக்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.இதுவரை பழைய வாகனம் வைத்திருப்போர் புதிய வாகனம் வாங்குவதற்கு உண்டான யோகம் ஏற்படும்.

மேஷம் 1

தொழிலதிபர்கள் : மேஷ ராசி தொழிலதிபர்கள் கூ ட்டு தொழிலில் கவனம் தேவை,புதிய முதலிடுகளை தவிர்க்கவும்.

மேஷம் 2

மாணவர்கள்: மேஷ ராசி மாணவர்கள் வண்டி, வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை , சமூக வலைத்தளங்களை கையாள்வதில் கவனம் தேவை.

மேஷம் 6

பெண்கள் : மேஷ ராசி பெண்களில் யாருக்கெல்லாம் குரு திசை மற்றும் ராகு திசை நடைபெறுகின்றதோ அவர்கள் தங்களது உடல் நலத்தில் கவனம் தேவை.

மேஷம் 9

கலைஞர்கள் : மேஷ ராசி கலைத்துறையினருக்கு உடல் உழைப்பு அதிகமாகவும்,வருமானம் குறைவாகவும் இருக்கும்.எந்த ஒரு காரியத்திலும் நிதானமாக செயல்படுவது மிகுந்த நன்மை பயக்கும்.

மேஷம் 3

அரசியல்வாதிகள்:  மேஷ ராசி அரசியல்வாதிகள் மிகவும் நிதானம், மற்றும் பொறுமையை கடைபிடிப்பது உத்தமம். கூட்டனி கட்சியை தேர்வு செய்வதில் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

மேஷம் 45

விவசாயிகள் : மேஷ ராசி விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழிலில் அதிக முதலிடுகளை தவிர்ப்பது நன்மை உண்டாக்கும். விவசாயத்திற்கு தேவையான நீர்பாசன வசதிகள் கிடைக்கும். விவசாய கடன் ரத்தாவது காலதாமதமாகும்.

mesam 67

பரிகாரம்: மேஷ ராசியில் பிறந்தவர்களில் யாருக்கெல்லாம் ராகு திசை நடைபெறுகிறதோ அவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் துர்க்கையம்மனை வாழிபாடு செய்வதும் யாருக்கெல்லாம் குரு திசை நடைபெறுகிறதோ அவர்கள் திருச்செந்தூர் சென்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து வர உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.