“மேல் சாதி காரனுக்கு கொம்பிருந்தா காட்டுங்கய்யா”… சாதி ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி பேசும் சூரரைப் போற்று படத்தின் பாடல்!

“மேல் சாதி காரனுக்கு கொம்பிருந்தா காட்டுங்கய்யா”… சாதி ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி பேசும் சூரரைப் போற்று படத்தின் பாடல்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் படம் “சூரரைப் போற்று”. இந்த படம் டெக்கான் ஏர்வேஸ் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக்  கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீடு விமானத்தில் 100 பள்ளி மாணவர்களுடன் விமர்சையாக நடத்தப்பட்டு பலரது பாராட்டைப் பெற்றது. 

soorari-pottru-01

ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் வெய்யோன் சில்லி பாடல் மற்றும் மாறா தீம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான மண்ணுருண்ட பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை கிராம மண்வாசனை வீசுமாறு செந்தில் கணேஷ் பாடியுள்ளார்.

soorari-pottru

கீழ் சாதி உடம்புக்குள்ள சாக்கடை ஓடுதா? மேல் சாதி காரனுக்கு கொம்பிருந்தா காட்டுங்கய்யா என்பது போன்ற சாதி ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டும் வரிகள் பாடல் முழுதும் பரவிவருகிறது.

விமான நிறுவனரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாதிய கருத்துக்களைத் தாங்கி நிற்கும் பாடல்கள் வெளியாகியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.