மேல்முறையீட்டுக்கு தயாராகும் ஆளுநர் மாளிகை: முன்ஜாமீன் கோரும் நக்கீரன் ஊழியர்கள்!

 

மேல்முறையீட்டுக்கு தயாராகும் ஆளுநர் மாளிகை: முன்ஜாமீன் கோரும் நக்கீரன் ஊழியர்கள்!

நக்கீரன் இதழில் பணியாற்றும் 35 ஊழியர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

சென்னை: நக்கீரன் இதழில் பணியாற்றும் 35 ஊழியர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக நக்கீரன் வார இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது ஆளுநரின் தனிச் செயலாளர் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால், பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு நடைபெற்ற நீண்ட விசாரணைக்குப் பின், அவர் மீது பதியப்பட்டிருந்த 124-வது பிரிவை நீக்கி நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். மேலும், நக்கீரன் கோபாலை போலீஸ் காவலில் எடுக்க முகாந்திரம் இல்லை என் கூறி அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டனர். அந்த வழக்கில் நக்கீரன் தலைமை ஆசிரியர் கோவி.லெனின் உள்ளிட்ட நக்கீரன் ஊழியர்கள் 35 பேரின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தயாராகி வருவதாக நேற்று மாலை தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், நக்கீரன் ஊழியர்கள் 35 பேரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.