மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்மா பானர்ஜியை நாங்க தோற்கடிப்போம்…… பா.ஜ.க. தலைவர் உறுதி…

 

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்மா பானர்ஜியை நாங்க தோற்கடிப்போம்…… பா.ஜ.க. தலைவர் உறுதி…

எதிர்வரும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜியை தோற்கடிப்போம் என பா.ஜ.க.வின் தேசிய பொது செயலாளர் ராம் மாதவ் தெரிவித்தார்.

மேங்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளை இருக்கிற இடம் தெரியாத அளவுக்கு ஆக்கியவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. மக்கள் மத்தியில் மம்தாவுக்கு பெரிய அளவில் செல்வாக்கு உள்ளது. அதனால் தொடர்ந்து 2வது முறையாக மம்தா பானர்ஜி மேங்கு வங்கத்தை ஆட்சி செய்து வருகிறார்.

மம்தா பானர்ஜி

அப்படிப்பட்ட மம்தாவுக்கு தற்போது பா.ஜ.க. ரூபத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது அதனை உறுதி செய்வது போல் அந்த கட்சி அங்கு அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது. உதாரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் 18 தொகுதிகளை கைப்பற்றி மம்தாவுக்கு கிலியை ஏற்படுத்தியது. அதேசமயம் அண்மையில் அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

பா.ஜ.க.

இருப்பினும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தில் பா.ஜ.க. தேசிய பொதுசெயலாளர் ராம் மாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எதிர்வரும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற சிறப்பாக முயற்சி செய்கிறோம். இந்த முறை நாங்கள் மம்தா பானர்ஜியின் அரசை தோற்கடிப்போம் மற்றும் அங்கு பா.ஜ.க. அரசை அமைப்போம் என  தெரிவித்தார்.