மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி; இந்திய அணி பவுலிங்

 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி; இந்திய அணி பவுலிங்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற அந்த அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்

ஹைதராபாத்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற அந்த அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவு அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 149.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 649 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி,  மூன்றாவது நாள் ஆட்டத்தில் பாலோ ஆன் ஆனது. தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அந்த அணி, 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிஹைதராபாத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காயத்தில் இருந்து மீண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய கேப்டன் ஹோல்டர், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் முகமது ஷமிக்கு ஓய்வு தரப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், 294-வது டெஸ்ட் வீரராக அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கீமோ பால், லீவிஸ் நீக்கப்பட்டு வாரிகன் அணிக்கு திரும்பியுள்ளார்.

முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீசை 3-வது நாளுக்குள் சுருட்டி வீசிய இந்திய அணி அதே உத்வேகத்துடன் இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரும் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. ஹைதராபாத் ஸ்டேடியத்தில் இந்திய அணி இதுவரை தோற்றதில்லை. இங்கு நடந்துள்ள 4 டெஸ்டுகளில் இந்திய அணி 3-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.