மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் கட்டணம் உயர்வு!

 

மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் கட்டணம் உயர்வு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ரயில்கள் மலைப் பாதை வழியே இயக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ரயில்கள் மலைப் பாதை வழியே இயக்கப்பட்டு வருகின்றன.  இந்த வழியில் இயற்கை எழில் மிகுந்து காணப்படுவதால் பல சுற்றுலாப் பயணிகள் இதில் பயணம் செய்வதற்கு ஆர்வம் காட்டி வந்தனர். மேட்டுப் பாளையத்திலிருந்து நீலகிரிக்குக் காலை 7:10க்கும், மாலை 2 மணிக்கும் மலை ரயில் இயக்கப் பட்டு வருகிறது.  இந்நிலையில், பயணிகளின் வரத்து அதிகரிப்பதால் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ttnb

அதன் படி, முதல் வகுப்புக்கான கட்டணம் ரூ.470 இல் இருந்து ரூ.600க்கும், முன்பதிவு இல்லாத முதல் வகுப்பு பயண கட்டணம் ரூ.395இல் இருந்து ரூ.520க்கும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணக்கட்டணம் ரூ.145இல் இருந்து ரூ.295க்கும், முன்பதிவில்லா ரூ.75 இல் இருந்து ரூ.175க்கும் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மலை ரயில் பராமரிப்பு பணிக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.30 கோடி செலவாவதாகவும் ஆனால் வருவாய் 4 கோடி மட்டுமே கிடைப்பதால் அதனை ஈடுகட்டுவதற்காகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.