மேக்கப் இல்லாமல் விமானநிலையத்தில் ரசிகர்களிடம் மாட்டிக் கொண்ட நடிகை

 

மேக்கப் இல்லாமல் விமானநிலையத்தில் ரசிகர்களிடம் மாட்டிக் கொண்ட நடிகை

மலையாளத்தில் ‘பைனல்ஸ்’ படத்துக்காக படு ரொமாண்டிக்கான பாடல் காட்சியில் நடித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய ப்ரியா வாரியர், சமீபத்தில்

‘ஒரு அடார் லவ்’ படத்தில் கண் சிமிட்டி, ஓவர் நைட்டில் இந்தியா முழுக்க பிரபலமானவர் ப்ரியா வாரியர். நடிகை ப்ரியா வாரியரின் கண் சிமிட்டலுக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பில் அகல கால் வைத்து, எல்லா மொழியிலும் ‘ஒரு அடார் லவ்’ படத்தை ரிலீஸ் செய்தார்கள்.  அந்த கண்ணடிக்கும் காட்சி பிரபலமானதே தவிர படம் சரியாக ஓடாமல் ப்ரியா வாரியரின் காலை வாரிவிட்டது. 

அதன் பிறகு, ‘ஸ்ரீதேவி பங்களா’, ‘லவ் ஹாக்கர்’ என்று தற்போது இந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ப்ரியா வாரியர்.  இந்நிலையில், மலையாளத்தில் ‘பைனல்ஸ்’ படத்துக்காக படு ரொமாண்டிக்கான பாடல் காட்சியில் நடித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய ப்ரியா வாரியர், சமீபத்தில் முழுக்கவே மேக்கப் ஏதும் இல்லாமல் ஹைதராபாத் ஏர்போர்ட்டில்  ரசிகர்களிடையே சிக்கிக் கொண்டார்.

பிரியா பிரகாஷ் வாரியர்

பச்சை நிற டாப்ஸும், கறுப்பு ஜீன்ஸுமாக மேக்கப் ஏதும் இல்லாமல் வந்திருந்த ப்ரியாவாரியரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.  ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தின் சர்ச்சை குறித்து கேட்டப்போது, ‘அதெல்லாம் தயாரிப்பாளர்களோட பிரச்சனை. ஸ்ரீதேவி பங்களா, இந்தியில் என்னுடைய அறிமுக படம். அந்த படத்தைச் சுற்றி சில சர்ச்சைகள் இருக்கிறது என தெரியும். ஆனால், ரெண்டாவது ட்ரைலர் ரிலீஸாகி எல்லோரும் பாராட்டுகிறார்கள். ‘லவ் ஹாக்கர்’ படம் சைபர் க்ரைம் பற்றிய கதை. அதில் நான் சிக்கிக் கொள்கிற மாதிரியான படம் என்றார்.