மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

 

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு முன்மொழிந்துள்ள தீர்மானத்தை மக்களின் நலனுக்காக முழுமையாக ஆதரிக்கிறேன் என தெரிவித்தார்.

அதனையடுத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன். மத்திய நீர்வள குழுமம் வழங்கிய அனுமதியை திரும்பப்பெற மத்திய நீர்வள அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி தந்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது” என உரையாற்றினார்.

அதன்பின், அவையில் கூடியிருந்த அனைத்து உறுப்பினர்களின் முழு ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.