மெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்திக்கு  அவரது ஸ்ரீநகர் வீட்டில் தடுப்பு காவல் .-குளிரிலிருந்து காப்பற்றும்படி குமுறல்… 

 

மெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்திக்கு  அவரது ஸ்ரீநகர் வீட்டில் தடுப்பு காவல் .-குளிரிலிருந்து காப்பற்றும்படி குமுறல்… 

பி.டி.பி தலைவர் மெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி, ஆகஸ்ட் மாதம் ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டில்   தடுப்பு காவலில்  வைக்கப்பட்டதிலிருந்து தனது தாயின் ட்விட்டர் கணக்கை கையாளுகிறார்.

mufti

 370 வது விதிகளை ரத்து செய்வதாக மையம் அறிவித்த நாள் மற்றும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க முடிவெடுத்த நாளான .ஆகஸ்ட் 5 முதல் ஸ்ரீநகரில் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்கள் ஃபாரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களில் மெஹபூபாவும் இருக்கிறார்,

faruk

கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து  கடந்த மூன்று மாதங்களாக இங்குள்ள விருந்தினர் மாளிகையில் காவலில்  வைக்கப்பட்டுள்ள தனது தாயை பள்ளத்தாக்கின் கடுமையான குளிர்காலத்தை சமாளிக்க தகுந்த  ஒரு இடத்திற்கு மாற்றுமாறு நிர்வாகத்தை இல்டிஜா கேட்டுக் கொண்டார்.

ildija

பி.டி.பி.யின் தலைவர் மெஹபூபாவுக்கு ஏதேனும் நேர்ந்தால் இந்த மையம்தான்  பொறுப்பு என , ஸ்ரீநகர் துணை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் இல்டிஜா முப்தி எழுதியுள்ளார்.

mufti

“எனது தாயின் நல்வாழ்வு குறித்து நான் பலமுறை கவலைகளை எழுப்பியுள்ளேன். கடுமையான குளிர்காலத்திற்கு ஏற்ற இடத்தை மாற்றுமாறு ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்ரீநகர் DC க்கு  கடிதம் எழுதினேன். அவருக்கு ஏதேனும் நேர்ந்தால், இந்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று இல்டிஜா ட்வீட் செய்துள்ளார் .