மெரினாவில் ‘சிறப்புப் பாதை’ : உற்சாகத்துடன் கடல் அலையில் நனைந்து விளையாடிய மாற்றுத்திறனாளிகள்!

 

மெரினாவில் ‘சிறப்புப் பாதை’ : உற்சாகத்துடன் கடல் அலையில் நனைந்து விளையாடிய மாற்றுத்திறனாளிகள்!

மெரினாவிற்குச் சென்று அலைகளை ரசிக்க வேண்டும்.. மண்ணில் விளையாட வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும்.

ஆண்டுதோறும் டிசம்பர் 3 ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளின் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மெரினாவிற்குச் சென்று அலைகளை ரசிக்க வேண்டும்.. மண்ணில் விளையாட வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும்.

ttn

குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கும் ஆசைகளில் ஒன்றென இதனைக் கூறலாம். சாலையிலிருந்து கடற்கரை வரை முழுவதுமாக இருக்கும் மண்ணில் சாதாரண மக்களாலேயே நடப்பது கடினம். இதில், மாற்றுத் திறனாளிகளை அழைத்து வருவது சாத்தியமாக இருந்தாலும் கடினமான செயல். அவர்களின் ஆசையை அறிந்த சென்னை வித்யாசாகர் ஊனமுற்றோர் உரிமைகள் இணையம், மாற்றுத் திறனாளிகள் கடல் அலைகளை ரசிக்கும் நிகழ்வுக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.

ttn

இதனை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் மற்றும் மாநில மாற்றுத் திறனாளி அலுவலக ஆணையர் உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர். இதில், மாநகராட்சி சார்பில், 720 அடி நீளம், 8 அடி அகலத்தில் பிரத்தியேக சிறப்புப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ttn

அது மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகள் சாலையில் இருந்து கடல் வரை செல்ல ஏதுவாக உள்ளது. இது வரும் சனிக்கிழமை வரை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், நேற்று ஆயிரக் கணக்கான மாற்றுத் திறனாளிகள் மெரினா கடற்கரைக்கு வந்து அலைகளை ரசித்து, கடல் நீரில் நனைந்து மகிழ்ந்தனர். இன்றும் பல மாற்றுத் திறனாளிகள் கடற்கரைக்கு வந்து உற்சாகத்துடன் கடலின் அழகை ரசித்து வருகின்றனர்.

ttn

 

இது குறித்துப் பேசிய மாற்றுத் திறனாளிகள், எங்களுக்கும் தினமும் மற்றவர்களைப் போல மெரினாவுக்கு வந்து தினந்தோறும் இதே போலக் கடலை ரசிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று மட்டுமே இத்தகைய பாதைகள் அமைக்கப்படுகின்றன.

ttn

இதனை நிரந்தரமாக அமைக்கச் சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்புப் பாதை மாற்றுத் திறனாளிகளிடையே  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.