மெக்சிகோவில் அரிய வகை ஹம்ப்பேக் திமிங்கலம் வலையில் சிக்கியது – வீடியோ உள்ளே

 

மெக்சிகோவில் அரிய வகை ஹம்ப்பேக் திமிங்கலம் வலையில் சிக்கியது – வீடியோ உள்ளே

மெக்சிகோவில் அரிய வகை ஹம்ப்பேக் திமிங்கலம் வலையில் சிக்கியது.

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் அரிய வகை ஹம்ப்பேக் திமிங்கலம் வலையில் சிக்கியது.

மெக்சிகோ அருகே கலிபோர்னியா வளைகுடாவில் சட்டவிரோதமான மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை திமிங்கலமான ஹம்ப்பேக் (Humpback) வகை திமிங்கலத்தை விலங்கு நல ஆர்வலர்கள் மீட்டனர். அவர்கள் கடலில் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது இந்த அரிய வகை திமிங்கலம் வலையில் சிக்கி தவித்து வருவதை கண்டனர். இதையடுத்து நீண்ட முயற்சிக்கு பிறகு அதை வலையில் இருந்து விடுவித்தனர்.

அழியும் நிலையில் உள்ள டோட்டோபா என்ற மீனை பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட விலையில் இந்த ஹம்ப்பேக் வகை திமிங்கலம் சிக்கி இருக்கலாம் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கூறினர். மேலும் டோட்டோபா மீன் விலை அதிகமாக விற்பனைக்கு போகும் என்பதால் மீனவர்கள் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.