மூளையை வளர்க்க விரும்புகிறேன்… முடியை அல்ல… ஓவியாவின் அதிரடி பதிவு 

 

மூளையை வளர்க்க விரும்புகிறேன்… முடியை அல்ல… ஓவியாவின் அதிரடி பதிவு 

‘களவாணி’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை ஓவியாவை, படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற போதிலும் ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் அதன் பிறகு  பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை . ஆனால் பிக்பாஸ் சீசன் 1 நடிகை ஓவியாவின் வாழ்க்கையையே மாற்றி விட்டது. அந்த நூறு நாட்களில் ஓவியாவின் சம்பளமும் பல மடங்கு ஏறியது. ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இன்றும் சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி பரபரப்பாகவே இருந்து வருகிறது. தற்போது நாளை நமதே என்ற படத்தில் நடிகை ஓவியா நடித்துவருகிறார். பிக்பாஸ் விட்டில் இருந்து வெளியே வந்த ஒவியா தனது ஹேர் ஸ்டைலை மாற்றி கொண்டார். மேலும், தனது முடியை கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்ய கொடுத்துவிட்டதாகவும் கூறினார். 

 

 

இந்நிலையில் ஓவியாவின் ஹேர் ஸ்டைலை விமர்சித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில், “புகைப்படங்களுடன் மொக்க் டிபி இது. ஏன் நீங்கள் பிக் பாஸில் வைத்த ஹேர் ஸ்டைலை மீண்டும் கொண்டு வரமாட்டீர்கள்” என பதிவிட்டிருந்தார். 

இதற்கு பதிலடி கொடுத்த ஒவியா “நான் எனது மூளையை வளர்க்க நினைக்கிறேன், முடியை அல்ல. கவலைப்படாதீங்க நான் விக் வெச்சிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.