மூடப்படுகிறதா ஏர் இந்தியா விமான சேவை! மோடி ஆட்சியின் புதிய சாதனை!?

 

மூடப்படுகிறதா ஏர் இந்தியா விமான சேவை! மோடி ஆட்சியின் புதிய சாதனை!?

இந்தியா தற்போது படு மோசமான பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கதறுகிறார்கள். எதைப் பற்றியும் கவலையே படாத பிரதமராக தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழகத்தின் பொருளாதார நிலை இன்னும் படுமோசம் என்று சொல்கிற அளவில் தான் இருக்கிறது.

இந்தியா தற்போது படு மோசமான பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கதறுகிறார்கள். எதைப் பற்றியும் கவலையே படாத பிரதமராக தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழகத்தின் பொருளாதார நிலை இன்னும் படுமோசம் என்று சொல்கிற அளவில் தான் இருக்கிறது. வளர்ச்சி திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். தொலைத்தொடர்பு துறை தனியார் மயமாக்க வாய்ப்பு இருப்பதாக ஒருவிதமான  பதற்றத்திலேயே பிஎஸ்.என்.எல். ஊழியர்கள் இருக்கிறார்கள். நாட்டின் ரயில் சேவை பல்வேறு விதமான எதிர்ப்புகளை எல்லாம் சந்தித்தும், சில குறிப்பிட்ட வழிதடங்களில் தனியார் மயமாக்கப்பட்டு விட்டது. தனியார் நிறுவனங்கள் ரயில்வே துறையில் காலடி எடுத்து வைத்து ஒரே வாரத்தில், பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு அதிர்ச்சியைக் கொடுத்தன. 

air india

இந்நிலையில், அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா ஏகப்பட்ட கடனில் தத்தளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு மட்டுமே எரிபொருட்களைப் பெற்ற முறையில் ஏர் இந்தியா நிறுவனம் ரூ. 5,000 கோடி நிலுவையில் வைத்துள்ளது. இந்த தொகையை ஒரே தவணையில் செலுத்த முடியாது எனத் தெரிவித்து மாதம் 100 கோடி வீதம் தருவதாக ஏர் இந்தியா தெரிவித்திருந்தது. ஆனால் அப்படி மாதம் 100 கோடியும் தராமல் இழுத்தடித்து வருவதால், இந்த நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக, இனி எரிபொருள் வழங்குவதில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமைக்கு பிறகு காசு இல்லைன்னா பெட்ரோல் இல்லை என்று நம்மூர் மளிகைக்கடைக்காரரைப் போல கைவிரித்து விட்டன பெட்ரோலியம் நிறுவனங்கள். அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் எழுவதற்கான வாய்ப்புகளைத் தேடி தவித்து வருகிறது. ‘இதுவும் மோடி அரசின் சாதனை தான்’ என சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.