‘மூக்குத்தி அம்மன்’ வேடத்தில் நயன்… பகவதி அம்மன் கோயிலில் காதலருடன் சாமி தரிசனம்!

 

‘மூக்குத்தி அம்மன்’ வேடத்தில் நயன்… பகவதி அம்மன் கோயிலில் காதலருடன் சாமி தரிசனம்!

கோயில் நிர்வாகிகள் அவருக்கு உரிய மரியாதை அளித்து சாமி தரிசனம் செய்ய  அழைத்து சென்றனர்.

ஆர்.ஜே. பாலாஜி  அடுத்து தானே கதை வசனம் எழுதி இயக்கப்போவதாக அறிவித்துள்ள   திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை எல்.கே.ஜி படத்தை தயாரித்த ஜசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.  இப்படத்தில் நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மனாக   நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்து கொடுக்க இருப்பதாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்திருந்தார்.

ttn

இப்படத்தின் பூஜையானது கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் கடந்த 29ஆம் தேதி  நடைபெற்றது. இதில் நடிகை ஊர்வசி, மௌலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால்  வழக்கம்போல் நயன்தாரா பங்கேற்கவில்லை.

இந்நிலையில் நடிகை நயன்தாரா கன்னியாகுமரியிலுள்ள பிரசித்திபெற்ற பகவதியம்மன் திருக்கோயிலுக்கு நேற்று இரவு வருகை புரிந்தார். அவருடன் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் உடனிருந்தார். அப்போது கோயில் நிர்வாகிகள் அவருக்கு உரிய மரியாதை அளித்து சாமி தரிசனம் செய்ய  அழைத்து சென்றனர்.

ttn

பிறகு தனது  காதலருடன் இணைந்து நயன்தாரா சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். நயன்தாரா வந்திருப்பதை அறிந்து அங்கு ரசிகர்கள் குவிய தொடங்கினர். மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.