மு.க ஸ்டாலின் பிறந்தநாள் : 67 கிலோ எடை கேக் வெட்டி கொண்டாடிய திமுகவினர்!

 

மு.க ஸ்டாலின் பிறந்தநாள் : 67 கிலோ எடை கேக் வெட்டி கொண்டாடிய திமுகவினர்!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று 67 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று 67 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதால் தன் பிறந்தநாளுக்கு  வாழ்த்துக்கள் சொல்ல நேரில் வர வேண்டாம் என்றும் ஸ்டாலின் தெரிவித்து விட்டார். அதனால்  தமிழகம் முழுவதும் அவரது பிறந்த நாளை, மக்களுக்கு அன்னதானம் வழங்கி திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். 

ttn

ஸ்டாலினின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி கரூரில் 67 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதில் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கலந்து கொண்டு கேக் வெட்டி திமுக உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இது மட்டுமில்லாமல் அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் பொருட்டு கரூரில் பல்வேறு  நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.