முஸ்லிம்களுக்கு எதிரான எந்த மசோதாவையும் ஆதரிக்க மாட்டோம்… ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுதி

 

முஸ்லிம்களுக்கு எதிரான எந்த மசோதாவையும் ஆதரிக்க மாட்டோம்… ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுதி

தேசிய குடிமக்கள் பதிவேடு உள்பட முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு மசோதாவையும் ஆதரிக்க மாட்டோம் என ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பாஷா ஷேக் பெபாரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர். இந்நிலையில் அதற்கு அடுத்த பத்து நாட்களில் அந்த கட்சி தனது நிலைப்பாட்டிலிருந்து திடீரென பல்டி அடித்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு மசோதாவையும் ஆதரிக்க மாட்டோம் என தற்போது அந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பேசியுள்ளார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வருமான பாஷா ஷேக் பெபாரி இது குறித்த கூறுகையில், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்பட முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு மசோதாவையும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது. முஸ்லிம்களுக்கு பிரச்னைகளுக்கு அளிக்கும் எந்தவொரு மசோதாவையும் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.

தேசிய குடிமக்கள் பதிவேடு

நாடாளுமன்றத்தில் ஒரு விதமாக நடந்து கொண்டு விட்டு வெளியே வேறுவிதமாக பேசும் இரண்டாவது கட்சி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ். சிவ சேனா கட்சியும் முதலில் அப்படித்தான் நடந்தது. நாடாளுமன்ற மக்களவையில் தேசிய குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவு கொடுத்து விட்டு, பின்பு அதற்கு எதிர்மறையாக அந்த கட்சி பேசியது.