முழுக்கவே ஆடையில்லாமல் சர்ச்சையை கிளப்பிய அமலாபால்

 

முழுக்கவே ஆடையில்லாமல் சர்ச்சையை கிளப்பிய அமலாபால்

இலை மறை, காய் மறை எல்லாம் கிடையாது. முழுக்கவே ஆடையில்லாமல் ‘ஆடை’ படத்தில் நடித்திருக்கிறார் அமலாபால்.  ஆடை படத்தில் அரைகுறை ஆடையோட அமலாபால் புகைப்படம் வெளியான போதே பலத்த சர்ச்சைகள் எழுந்தது. சர்ச்சைகள் எழுந்த சூடோடு அமலாபால் நடிக்கும் சில படங்களின் அறிவிப்புகளும் வெளியானது.

இலை மறை, காய் மறை எல்லாம் கிடையாது. முழுக்கவே ஆடையில்லாமல் ‘ஆடை’ படத்தில் நடித்திருக்கிறார் அமலாபால்.  ஆடை படத்தில் அரைகுறை ஆடையோட அமலாபால் புகைப்படம் வெளியான போதே பலத்த சர்ச்சைகள் எழுந்தது. சர்ச்சைகள் எழுந்த சூடோடு அமலாபால் நடிக்கும் சில படங்களின் அறிவிப்புகளும் வெளியானது. தற்போது ஆடை படத்தோட ட்ரைலரில் முழுக்கவே ஆடையில்லாமல் அமலாபால் நடித்திருக்கும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பையும், கண்டனத்தையும் பெற்றிருக்கிறது.
மேயாத மான் படம் புகழ் ரத்னகுமார் இயக்கத்தில், வெளியான ஆடை படத்தின் ட்ரைலரில், ஒரு உயரமான சாப்ட்வேர் நிறுவனத்தின் மாடியில் உள்ள அறையில் ஆடையில்லாமல் அமலாபால் நடித்திருக்கிறார். இப்படி எல்லாம் விமர்சனங்கள் எழும் என்று தெரிந்து தான் துணிச்சலாக ட்ரைலரை வெளியிட்டுள்ளார் இயக்குநர். 

aadai

ட்ரைலரைப் பார்க்கும் போது இது வழக்கமான கதையில்லை என்று தெரிந்தாலும், முழுக்கவே ஆடையின்றி நடித்தது குறித்து அமலாபால் தெரிவிக்கையில், ‘என்னோட கேரியரில் இந்த படம் மறக்க முடியாத படமாக இருக்கும். இது போன்ற கதை கிடைப்பது கடினம் என்பதால், என்னைத் தேடி வந்த பிற படங்களின் வாய்ப்புகளைக் கூட தவிர்த்துவிட்டேன். படத்திற்கு, ஆடை என்று தலைப்பு வைத்துவிட்டு படத்தில் நான் ஏன் ஆடையில்லாமல் நடித்தேன் என்பதற்கான காரணம் படம் பார்க்கும்போது தெரியும்’ என்கிறார். கோலிவுட்டை போன்றே பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வர ஆசைப்படுகிறார் அமலாபால்.

விரைவில்  ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமலாபால் நடிப்பார் என்று ஆரூடம் சொல்கிறார்கள் கோலிவுட்டில். ஆடை படத்தோட ட்ரைலர் ஏற்படுத்திய பரபரப்பு ராம்கோபால் வர்மா ஹீரோயின் ஆகிறார் அமலாபால்.
ஆடை படம், அமலாபாலோட பாலிவுட் கனவுகளுக்கு ஒரு காஸ்ட்லி விசிட்டிங் கார்ட் என்கிறார்கள் அவருடைய நெருக்கமான நண்பர்கள்.