முருகானந்தம் தயாரித்த மலிவு விலை நாப்கின்: ஆஸ்கரை தட்டி சென்ற குறும்படம்!

 

முருகானந்தம் தயாரித்த மலிவு விலை நாப்கின்: ஆஸ்கரை தட்டி சென்ற குறும்படம்!

‘பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்’ என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது

சென்னை: ‘பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்’ என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சினிமாத்துறையில் மிக உயிரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. தற்போது 91வது விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலை 7 மணி முதல் தொடங்கப்பட்டு நடந்துவருகின்றன.

period end of sentences

அதில் சிறந்த திரைப்படம் , நடிகர்கள் , நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , இசையமைப்பாளர்கள் என சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

period end of sentences

இந்நிலையில், மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பேசும் குறும்படமான ,’பீரியட்  எண்ட் ஆப் சென்டன்ஸ்’ (period  end of sentences ) என்ற குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த முருகானந்தம் மலிவு விலை நாப்கீன் தயாரித்ததை மையமாகக் கொண்டு உருவான படம்  என்பது குறிப்பிடத்தக்கது.