முருகானந்தனைத் தேடி வந்த கிரிக்கெட் வீரர்  பிராவோ

 

முருகானந்தனைத் தேடி வந்த கிரிக்கெட் வீரர்  பிராவோ

மெகா ஸ்கிரீனில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ரசித்துக் கொண்டிருந்த கோவை மக்களுக்கு நேற்று பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. கோவை முருகானந்தனைத் தேடி மேற்கு இந்தியா  கிரிக்கெட் வீரர் பிராவோ கோவைக்கு வந்திருந்தார்.

மெகா ஸ்கிரீனில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ரசித்துக் கொண்டிருந்த கோவை மக்களுக்கு நேற்று பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. கோவை முருகானந்தனைத் தேடி மேற்கு இந்தியா  கிரிக்கெட் வீரர் பிராவோ கோவைக்கு வந்திருந்தார்.

bravo

விலை குறைந்த நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த கோவை தமிழர் அருணாச்சலம் முருகானந்தத்தைப் பார்ப்பதற்காக, ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் அவருடைய விலாசத்தைத் தேடிக் கொண்டிருந்த பிராவோ, தனது உதவியாளர்கள் மூலமாக முருகானந்தத்தைச் சந்திப்பதற்கான நேரம் குறித்துக் கொண்டு, நேற்று கோவைச் சென்று சந்தித்தார். 

arunachalam

முருகானந்தத்தின் கண்டுபிடிப்பை ’பேட் மேன்’ திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தார் நடிகர் அக்‌ஷய் குமார்.  மாதவிலக்கு காலங்களில், பேட்களின் விலை அதிக விலையில் விற்கப்படுவதால் பல பெண்கள் நாப்கின்களை உபயோகிக்காமல் இருப்பதாகவும், அவர்களின் இந்த துயரத்தை நீக்குவதற்காகவே விலை குறைவான ஆரோக்கியமாக நாப்கின்களை உருவாக்கத் தொடங்கியவர் அருணாச்சலம் முருகானந்தம். இவரது இந்த கண்டுபிடிப்பு பலத்த வரவேற்பைப் பெற்று, நாப்கின்கள் தயாரிப்பில் உள்ளூர் பெண்களே ஈடுபட்டுள்ளதையும் அறிந்த பிராவோ, கோவை வந்து, முருகானந்தத்தைச் சந்தித்து தனது சொந்த ஊர் பிரச்சனையைப் பற்றி உருக்கமாக பேசினார்.

bravo and arunachalam

 மேற்கு இந்தியா கிரிக்கெட் வீரரான டுவைன் பிராவோவின் சொந்த ஊரான டிரினிடாட் டொபாகோவில், பள்ளிக்குச் செல்லும் மாணவிகளில் பலரும், மாதவிடாய்ப் பிரச்சினைகளால் படிப்பை மேற்கொண்டு தொடராமல், பாதியிலேயே நின்றுவிடுகிறார்களாம். கிராமப்புற பெண்களுக்கும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லையென்று வருத்தப்பட்ட பிராவோ, இந்த சந்திப்பின் போது தனது ஊருக்கும் இதே போல் மலிவு விலையில் நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரம் வேண்டும் என்று முருகானந்தத்திடம் கேட்டுள்ளார். முருகானந்தமும் நாப்கின்கள் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை டிரினிடாடிற்கு அனுப்புவதாக உறுதியளித்துள்ளார். கோவையில் இருந்து தனது நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய ஆகும் செலவை தான் ஏற்றுக் கொள்வதாகவும் பிராவோ தெரிவித்துள்ளார். விரைவில், முருகானந்தம் தயாரித்த இயந்திரங்கள், பிராவோ மூலம் டிரினிடாட் டொபாகோ செல்ல உள்ளன.  அதனை இயக்குவதற்கும், எப்படி அவரது கிராமப் பெண்களை வைத்து, நாப்கின்கள் தயாரிப்பதற்கு பயிற்சிகளைக் கொடுப்பது என்பதைப் பற்றி விவாதிப்பதற்கும் முருகானந்தத்தை நேரில் சந்தித்துள்ளார்.