முரசொலி வைத்திருந்தால்? மனிதன் என்று பொருள் ; ரஜினிக்கு முரசொலி பதிலடி!

 

முரசொலி வைத்திருந்தால்? மனிதன் என்று பொருள் ; ரஜினிக்கு முரசொலி பதிலடி!

ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி’ என்றார். 

துக்ளக் பத்திரிக்கையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி   நடைபெற்றது.  இந்த விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா  நாயுடு, நடிகர் ரஜினிகாந்த்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மோடி காணொளி மூலம் சோ குறித்து பேசினார். அப்போது பேசிய ரஜினிகாந்த், ‘ சோ மீது உள்ள மரியாதையால் தான் பிரதமர் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த விழாவில் பங்கேற்கின்றனர். முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என சொல்லிவிடலாம் ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்’ என்றும் ‘ துக்ளக் பத்திரிகையை பிரபலப்படுத்தியவர்கள் இருவர். ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி’ என்றார். 

 

இந்நிலையில் முரசொலி வைத்திருப்பவன் உண்மையில் யார் என்று முரசொலி விளக்கமளித்துள்ளது. முரசொலி வைத்திருந்தால்? என்ற தலைப்பில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், ‘முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள், அதுவும் திராவிட இயக்க தமிழன் என்ற பொருள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பேதமற்ற உன்னத கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவன் என்று பொருள். எல்லோருக்கும் எல்லாம் என்று சமத்துவ எண்ணம் கொண்டவன் என்று பொருள். கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியின் இன்றைய குடிமக்கள் என்று பொருள்.

ttn

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப என்று பொருள். முரசொலி வைத்திருந்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் என்று பொருள். தன்னை ஒடுக்கிய வாய் யார் என்று உணரத் தொடங்கி விட்டோம் என்று பொருள் இனியும் ஒடுங்க மறுப்பவன் என்று தொடங்கியவர் திமிரோடு ஒன்று சேர்ப்பவன் என்று பொருள் எத்தனை மிகமிக என்றும் போட்டுக் கொள்ளுங்கள் என்று பொருள். மிக மிகப் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட என்று பொருள். தான் யாருக்கும் அடிமை இல்லை தனக்கும் யாரும் அடிமை இல்லை என்பவன் என்று பொருள்’ என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

ttn

மேலும் அந்த செய்தியில், ‘முரசொலி வைத்திருந்தால் வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பவன் என்று கூறி பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு பவன் என்று பொருள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பவன் என்று பொருள்.

ttn

தமிழை தமிழின கருதுபவன் என்று பொருள். தமிழ் பகைவரை இடம் கண்டவன் என்று பொருள் முரசொலி வைத்திருந்தால் இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று பொருள். சமஸ்கிருத மயமாக்கலை எப்போதும் எதிர்ப்பவன் என்று பொருள்’ என்ற அந்த தலையங்க செய்தியில்  இறுதியாக  முரசொலியை நீங்கள் வைத்திருந்தால் மனிதன் என்று பொருள் என்று கூறப்பட்டுள்ளது.