முரசொலி விவகாரம்: பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட முருகன் அரசியல் காழ்ப்புணர்வோடு செயல்படுவார்! – தி.மு.க வாதம்

முரசொலி விவகாரம்: பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட முருகன் அரசியல் காழ்ப்புணர்வோடு செயல்படுவார்! – தி.மு.க வாதம்

முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சர்ச்சையைக் கிளப்பினார். அதற்கான ஆதாரத்தைத் தரவில்லை. குற்றச்சாட்டை மட்டுமே கூறுவேன், ஆதாரத்தை நீங்களே வெளியிட்டு குற்றமற்றவர் என்று நீங்களே உறுதி செய்துகொள்ளுங்கள் என்ற வகையில் ராமதாஸ் செயல்பாடு இருந்தது.

முரசொலி விவகாரத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவரின் நம்பகத்தன்மை பற்றி தி.மு.க கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சர்ச்சையைக் கிளப்பினார். அதற்கான ஆதாரத்தைத் தரவில்லை. குற்றச்சாட்டை மட்டுமே கூறுவேன், ஆதாரத்தை நீங்களே வெளியிட்டு குற்றமற்றவர் என்று நீங்களே உறுதி செய்துகொள்ளுங்கள் என்ற வகையில் ராமதாஸ் செயல்பாடு இருந்தது.

ramadoss

இந்த நிலையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இது தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தார். ஆணைத்தின் துணைத் தலைவர் முருகனும் இதை ஏற்றக்கொண்டு விசாரணைக்கு வரும்படி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தி.மு.க தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இந்த விசாரணையிலிருந்து அதன் துணைத் தலைவர் முருகன் விலகியிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. மேலும், முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆவணப் பட்டியல் மட்டும் கொடுத்தால் போதுமானது என்று உத்தரவிடப்பட்டது.

mk-stalin-08

இந்த நிலையில் இந்த வழக்கில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆணையத்தின் துணைத் தலைவர் விசாரணையிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்ற தடையை நீக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு தி.மு.க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும் எம்.பி-யுமான பி.வில்சன் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது அவர், “நீதிமன்ற உத்தவின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் தலைவரிடம் முரசொலி நில பட்டா ஆவண பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ள முருகன், 2011ம் ஆண்டு ராசிபுரம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டுள்ளார். பா.ஜ.க எஸ்சி, எஸ்டி பிரிவு தேசிய செயலாளராக இருந்துள்ளார். தற்போது அவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ளார். இப்படிப்பட்ட அரசியல் பின்னணி கொண்ட அவர் முரசொலி நிலம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டால் அரசியல் காழ்ப்புணர்வோடு நடத்துவார்” என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கார்த்திகேயன், “துணைத் தலைவர் முருகன்தான் விசாரிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பி இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.