மும்மொழி குறித்த சர்ச்சை பதிவு: எதிர்ப்பை தொடர்ந்து பதிவை நீக்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி!?

 

மும்மொழி குறித்த சர்ச்சை பதிவு: எதிர்ப்பை தொடர்ந்து பதிவை நீக்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி!?

பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற பதிவிற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அப்பதிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். 

சென்னை:  பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற பதிவிற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அப்பதிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். 

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைக் கட்டாய பாடமாக்கும் முயற்சியில் இறங்கியது.  எடுத்துக்காட்டாகத் தமிழ்நாடு என்றால் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று  இருக்க வேண்டும் என்றும் இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிரப் பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியைக் கூடுதலாகக் கற்பிக்கப்படும் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

hindi

இதையடுத்து இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டது. விருப்பத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தி மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டிய அவசியமில்லை’ என்று திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  இதற்கு பல்வேறு தரப்பினர்  வரவேற்றனர். 

tn cm

இந்நிலையில் பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி  பழனிசாமி கோரிக்கை வைத்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிப்பது உலகின் தொன்மையான ஒரு மொழிக்குச் செய்யும் சேவையாக இருக்கும்’  என்று குறிப்பிட்டிருந்தார். 

edapadi

இந்த பதிவானது தற்போது சர்ச்சையில் முடிந்துள்ளது. தமிழக முதல்வரே மும்மொழி கொள்கை ஆதரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு  இருப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து  எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பதிவை நீக்கியுள்ளார்.