மும்முரமாக பப்ஜி விளையாடிய இளைஞர்…தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலை குடித்து பலியான பரிதாபம்!

 

மும்முரமாக பப்ஜி விளையாடிய இளைஞர்…தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலை குடித்து பலியான பரிதாபம்!

அதே சமயம் இந்த விளையாட்டு மனதளவில் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதும் தற்கொலை, எதிர்ப்பாராதா மரணமும் இதனால் ஏற்படுகிறது. 

 ‘பப்ஜி’ என அழைக்கப்படும் விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது.இந்த விளையாட்டு வன்முறையைத் தூண்டுவது போல் அமைந்துள்ளதாகப் பல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  ஒரு சில கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விளையாட்டைச் சிறுவர்களும், இளைஞர்களும் விளையாடுவதை நிறுத்தவில்லை. அதே சமயம் இந்த விளையாட்டு மனதளவில் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதும் தற்கொலை, எதிர்ப்பாராதா மரணமும் இதனால் ஏற்படுகிறது. 

ttn

அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த  இளைஞர் சவுராப் யாதவ். 20 வயதான இவர் நண்பர் சந்தோஷ் சர்மாவுடன் குவாலியரில் இருந்து ஆக்ராவுக்கு ரயிலில்  சென்றுள்ளார்.  சந்தோஷ் சர்மா நகை தொழில் செய்பவர் என்பதால் நகைகளைச் சுத்தம் செய்யும் கெமிக்கலை தன் பையில் வைத்திருந்ததாகத் தெரிகிறது. அப்போது ரயிலில் சவுராப் யாதவ் மும்முரமாக பப்ஜி  விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தண்ணீர் தாகம் எடுக்கவே, நண்பர் சந்தோஷ் சர்மா பையிலிருந்து தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலை எடுத்து குடித்துவிட்டார். இதனால் அங்கேயே  மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து  அடுத்த ரயில்வே ஸ்டேஷனில் மருத்துவர்கள் தயாராக இருந்த நிலையில் சவுராப் யாதவ் அதற்குள் பரிதாபமாகப் பலியானார்.

ttn

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே உண்மை தெரியவரும் என்று கூறியுள்ளனர்.