மும்பையில் பட்டினியில் கிடப்பதை காட்டிலும் சொந்த ஊருக்கு போய் சாகலாம்… 1,400 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல முடிவு எடுத்த உத்தர பிரதேச தொழிலாளர்கள்….

 

மும்பையில் பட்டினியில் கிடப்பதை காட்டிலும் சொந்த ஊருக்கு போய் சாகலாம்… 1,400 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல முடிவு எடுத்த உத்தர பிரதேச தொழிலாளர்கள்….

போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டதால், மும்பையிலிருந்து 1,400 கி.மீட்டர் தொலைவில் உள்ள தங்களது சொந்து ஊருக்கு செல்ல சுமார் 2 ஆயிரம் உத்தர பிரதேச தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மும்பையில் உள்ள நேஷனல் மார்க்கெட் ரெடிமேட் கார்மெண்ட்ஸ்களுக்கு பிரபலமான மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் சுமார் பல சிறு கிளாத் மேனுபாக்சரிங் யூனிட்டுகள். இவற்றில் பல ஆயிரம் உத்தர பிரதேச தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அந்த யூனிட்கள் கடந்த 20 நாட்களாக மூடப்பட்டுள்ளன.

மும்பை நேஷனல் மார்க்கெட்டில் உள்ள கடை

வாழ்வாதாரம் மற்றும் கடைகள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வறுமை மற்றும் பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் தொடர்ந்து வாடகை வீட்டில் தங்கியிருந்தால் தொழிலாளர்களுக்கு உணவு அளிப்பதாக டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வாக்குறுதி கொடுத்தனர். அதன்படி உணவு அளித்தனர். ஆனால் 3 வாரத்துக்கு பிறகு தங்களால் தொடர்ந்து உணவு அளிக்க முடியாது என முதலாளிகள் சங்கம் தெரிவித்தது.

தொழிலாளர்கள்

முதலாளிகள் கையை விரித்து விட்டதால் தொழிலாளர்கள் பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். போக்குவரத்து முடக்கப்பட்டதால் மும்பையிலிருந்து 1,400 கி.மீட்டர் தொலைவில் உள்ள உத்தர பிரதேசத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக உத்தர பிரதேசத்தை சேந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில், மும்பையில் கொரோனா வைரஸ் மற்றும் பட்டினியில் கிடப்பதை காட்டிலும்  எனது சொந்த கிராமத்தில் இறப்பதை விரும்புகிறேன் என தெரிவித்தார்.