முன் விரோதம் காரணமாக பள்ளி மாணவிகளை வெட்டிய அரசு பேருந்து ஓட்டுநர்: காரணம் என்ன?

 

முன் விரோதம் காரணமாக பள்ளி மாணவிகளை வெட்டிய அரசு பேருந்து ஓட்டுநர்: காரணம் என்ன?

பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய அரசு பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி: பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய அரசு பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் பகுதியில் உள்ள என்.எம் வித்யாலயா பள்ளிக்குள், காலையில் புகுந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயன் என்ற அரசு பேருந்து ஓட்டுநர், பள்ளி ஜன்னல் கண்ணாடி மற்றும் பள்ளி வேன் கண்ணாடி  உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியுள்ளார். இதையடுத்து பள்ளிக்கு வந்த  பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவரை அரிவாளால் வெட்டியுள்ளார். மாணவிகளின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஜெயனை பிடிக்க முற்பட்டுள்ளனர்.ஆனால் அதில் இருவருக்கு வெட்டுக் காயம் விழுந்துள்ளது. ஒருவழியாக அவனைப் பிடித்த அப்பகுதி பொதுமக்கள், அருமனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

அவனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனது தங்கையுடனான சொத்து பிரச்னையில் தனது நீண்ட கால நண்பரும், தனியார் பள்ளியின் தாளாருமான வழக்கறிஞர் ராஜேஷ், இருதரப்பையும் அழைத்துப் பேசியதாகவும், தனது சகோதரிக்கு ஆதரவாக வழக்கறிஞர் ராஜேஷ் செயல்பட்டதால் ஏற்பட்ட முன் விரோதத்தால், பள்ளிக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டியதாக ஜெயன் வாக்குமூலம் அளித்துள்ளார்.