முன்பே கணித்த ஸ்டாலின்: அதிமுகவுடன் இணைகிறதா பாமக? உண்மை நிலவரம் என்ன?

 

முன்பே கணித்த ஸ்டாலின்: அதிமுகவுடன் இணைகிறதா பாமக? உண்மை நிலவரம் என்ன?

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அரசுடன் பாமக கூட்டணி அமைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அரசுடன் பாமக கூட்டணி அமைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தாலும், கூட்டணி இல்லாமல் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்துதான் இருக்கிறார் என்று பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதன் எதிரொலியாக நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பாமக யாரிடமும் பேச தொடங்கவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டைக் கூறுவோம் என்று அன்புமணி அடிக்கடி கூட்டணி குறித்து பேசி வருகிறார்.

anbumani

ஆனால் பாமக அதிமுகவுடன்  6 மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என பேசி முடிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒருபுறமிருக்க, நேற்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில்  ஆளுநர்  உரையை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ்,  ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவையாக உள்ளன’ என்று குறிப்பிட்டிருந்தார்.

2018 ஆம் ஆண்டு ஆளுநர்  உரையின் மீதான ராமதாஸ் அறிக்கையில், ‘பழைய மொந்தையில் மிகப் புளித்து போன கள்ளாக உள்ளது என்று ஆரம்பித்து, ஏமாற்றம் அளிக்கிறது, எந்தப் பயனுமில்லை, குரூரமான நகைச்சுவை, முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புகள், தகுதியற்ற பாராட்டுகள், பினாமி அரசின் பித்தலாட்டங்கள்’ என்று கடுமையான விமர்சித்திருந்தார்.  ஆனால் 2019ஆம் ஆண்டு ஆளுநர் உரையின் மீதான ராமதாஸின் அறிக்கையில், ‘வரவேற்கத் தக்கது, மன நிறைவு அளிக்கிறது, ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும், மிகவும் உதவியாக இருக்கும்’ என்ற பாராட்டுக்களே அதிகம்  இடம்பெற்றிருக்கின்றன.

anbumani

இதனால் பாமக அதிமுகவை நெருங்கிக் கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

stalin

இதை கருத்தில் வைத்து கொண்டு தான், செஞ்சியில் கடந்த மாதம்  திருமண விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அறிக்கைகளை வெளியிடக்கூடிய சில தலைவர்கள், ஆளுங்கட்சியைக் குறை சொல்லும்போதெல்லாம் ஆண்ட கட்சியாக உள்ள நம்மையும் குறை சொல்லக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். ஆளுங்கட்சி – ஆண்ட கட்சி என்றுதான் சில தலைவர்கள் சொல்கின்றனர். ‘இனி ஆளவே முடியாது’ என்ற நிலையில் உள்ளவர்கள் இதைக் கூறுவதுதான் வேடிக்கை” என்று பாமகவை மறைமுகமாகச் சாடினார்.