முன்னிலை முடிவு இல்லை… ஜார்கண்டில் பா.ஜ.க-தான் ஆட்சி அமைக்கும்! – முதல்வர் ரகுபர் தாஸ் உறுதி

முன்னிலை முடிவு இல்லை… ஜார்கண்டில் பா.ஜ.க-தான் ஆட்சி அமைக்கும்! – முதல்வர் ரகுபர் தாஸ் உறுதி

ஜார்கண்டில் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோட்சா கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ள நிலையில், பாரதிய ஜனதா தான் ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில முதல்வர் ரகுபர் தாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன. தொடக்கத்திலிருந்தே ஜார்கண்ட் முக்தி மோட்சா – காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தனிப் பெரும் கட்சியாக பாரதிய ஜனதா 29 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஜார்கண்ட் முக்தி மோட்சா 24 இடங்களிலும் காங்கிரஸ் 12 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. 

jharkhand-election-results

ஜார்கண்டில் பெரும்பான்மை பெறுவதற்கு 41 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தேவை. ஜார்கண்ட் முக்தி மோட்சா – காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால், அங்கு ஜார்கண்ட் முக்தி மோட்சா தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மாநில முதல்வரும் பா.ஜ.க வேட்பாளருமான ரகுபர் தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “முன்னிலை என்பது முடிவு இல்லை. 17 முதல் 18 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும். பாதி சுற்றுக்கள்தான் முடிந்துள்ளது. பல தொகுதிகளில் குறைந்தபட்ச வித்தியாசமே உள்ளது. இதனால், நிலைமை மாறும். பாரதிய ஜனதா வெற்றி பெறுவதுடன் ஆட்சியையும் அமைக்கும். அதற்குள்ளாக கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஈடுபடட்டும். நாங்கள் இறுதி முடிவை மிகவும் நம்புகிறோம்” என்றார்.
முதல்வரே இவ்வாறு கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என்ற எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்!