முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்!

குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் கம்பெனியின் நிலத்தை, தமது உறவினர்களுக்கு முறைகேடாக வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், வரும் 23 ஆம் தேதி நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். 

ஜெகத்ரட்சகன்

கடந்த 1982 ஆம் ஆண்டு குரோம் லெதர் கம்பெனியின் தலைவராக ஜெகத்ரட்சகன் பொறுப்பு வகித்தார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜெகத்ரட்சகன், பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் கம்பெனியின் நிலத்தை, தமது உறவினர்களுக்கு முறைகேடாக வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்தவழக்கில் ஜெகத்ரட்சகன் வரும் 23 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.