முந்தைய அரசில் மோடி கஷ்டப்பட்டு மறைத்த பூனைக்குட்டி வெளியே வந்தேவிட்டது!

 

முந்தைய அரசில் மோடி கஷ்டப்பட்டு மறைத்த பூனைக்குட்டி வெளியே வந்தேவிட்டது!

ஊரகப் பகுதிகளில் 5.8% ஆண்களும், 3.8% பெண்களும்; நகர்ப்புறங்களில் ஆண்கள் 7.1% பெண்கள் 10.8% பெண்களும் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகவும், சராசரியாக வேலைவாய்ப்பின்மை 6.1% இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 15 வயதிலிருந்து 29 வயதுடைய இளைஞர்களில் 19.23% பேருக்கு வேலை இல்லை எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.

1972-73ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது சுமார் 45 வருடங்களுக்குப் பிறகு 2017-18ஆம் வருடத்தில்தான் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. மத்திய புள்ளியியல் துறையின் அறிக்கை கடந்த ஜனவரி மாதமே பத்ரிகைகளில் கசியவிடப்பட்டது. ஆனால், தேர்தல் நேரத்தில் எதிர்மறையாக எதிரொலிக்கும் என்பதால், அந்த அறிக்கை அதிகாரப்பூர்வமானதல்ல என்று பூசி மெழுகப்பட்டது. இப்போது மோடி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற அடுத்த நாளே, முந்தைய அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Unemployment

இந்த அறிக்கையின்படி, ஊரகப் பகுதிகளில் 5.8% ஆண்களும், 3.8% பெண்களும்; நகர்ப்புறங்களில் ஆண்கள் 7.1% பெண்கள் 10.8% பெண்களும் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகவும், சராசரியாக வேலைவாய்ப்பின்மை 6.1% இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 15 வயதிலிருந்து 29 வயதுடைய இளைஞர்களில் 19.23% பேருக்கு வேலை இல்லை எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.

புள்ளியியல் துறையில் தாங்கள் இறுதிவடிவம் கொடுத்த இந்த அறிக்கை, பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவே இல்லை என்றும், தாங்கள் பொறுப்பு வகித்த ஆணையத்திற்கு அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கூறி, கடந்த ஜனவரி மாதமே தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் மோகனன் தன் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.